மேலும் அறிய

Ajithkumar: அஜித்தின் குளிர்பான விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகரின் மகன் - யார் தெரியுமா?

சில தினங்களுக்கு முன்பு கேம்பா குளிர்பான விளம்பரம் வெளியானது. அதில் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரின் மகனும் நடித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் நடித்துள்ள செய்தி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார் அஜித்குமார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் அவருக்கு கார் பந்தயத்தில் அளவு கடந்த ஆர்வம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார், பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட ஆண்டுகளாக களத்தில் இறங்காத அஜித் மீண்டும் முழு வீச்சில் செயல்பட்டு பல்வேறு பந்தயங்களில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். 

கார் பந்தயத்திற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் டீம் என்ற அணியை வழிநடத்தி வருகிறார். அந்த அணியானது ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கேம்பா குளிர்பானத்தோடு கைகோர்த்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. சினிமாவின் தொடக்கத்தில் விளம்பரங்களில் தலை காட்டிய அஜித் அதன்பின்னர் விளம்பரம், பட நிகழ்வு என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். 

ஆனால் திடீரென அவர் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் தோன்றியது ஆச்சரியத்தையும், அதேசமயம் பெரும் எதிர்ப்பையும் பெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேம்பா குளிர்பான விளம்பரம் வெளியானது. அதில் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகளும், துணிந்தவர்களுக்கு தடையே கிடையாது, லட்சியங்களை நோக்கி முன்னேறு  என வசனம் சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விளம்பரத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ACTOR JAVA SUNDARESAN (@actor_java_sundaresan)

அஜித் விளம்பரத்தில் பிரபல நடிகரின் மகன்

இந்த நிலையில் இந்த விளம்பரத்தில் பிரபல நடிகரின் மகனும் நடித்துள்ளார். அது வேறு யாருமல்ல.. ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாம்ஸின் மகன் தான். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “அஜித் குமார் சார் நடித்த Campa கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் என் மகன் யோஹனும் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.வாய்ப்பளித்த இயக்குனர் சிறுத்தை சிவா சார் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்” என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டர் மூலம் தனக்கென தனியிடம் பிடித்த நடிகர் சாம்ஸ், அவர் நடித்த அறை எண் 305ல் கடவுள் படத்தின் இடம்பெற்ற தன் கேரக்டர் பெயரை தன்னுடைய பெயராக “ஜாவா சுந்தரேசன்” என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jinping: 64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
Chennai Weather: மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather:மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை!- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை.! சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
RE Himalayan 440: 450 மாடலுக்கு பதிலா வந்த RE ஹிமாலயன் 440 ஓகே-வா.? வாங்குறதுக்கு முன்னாடி வேறுபாடுகள தெரிஞ்சுக்கோங்க
450 மாடலுக்கு பதிலா வந்த RE ஹிமாலயன் 440 ஓகே-வா.? வாங்குறதுக்கு முன்னாடி வேறுபாடுகள தெரிஞ்சுக்கோங்க
Tata Aeris Launch: அட, அழகா இருக்கே.! டிகோருக்கு பதிலாக புதிய ஏரிஸ்; ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி செடானை இறக்கும் டாடா
அட, அழகா இருக்கே.! டிகோருக்கு பதிலாக புதிய ஏரிஸ்; ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி செடானை இறக்கும் டாடா
Embed widget