‛சிவகார்த்திகேயன் பண ரீதியா ரொம்ப கஷ்டப்பட்டாரு... ’ அண்ணனாக அத்தனையையும் உடைத்த சூரி!
”ஒரு ஹீரோ எடுத்த புதிய முயற்சிதான் அது. மனசு கஷ்டப்படும் அளவுக்கு விமர்சனம் பண்ணாங்க.”
தமிழ் சினிமாவில் சிலரின் நட்பு நடிப்பை தாண்டியதாக இருக்கும் . அது காதலாக இருக்கலாம் , நட்பாக இருக்கலாம் அல்லது சகோதரத்துவமாக இருக்கலாம். அப்படித்தான் நடிகர் சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்குமான நட்பு. அண்ணன் - தம்பி போல் பழகும் இருவரும் , வெறும் வார்த்தைக்காக மட்டும் அப்படி அழைப்பதில்லை, உண்மையான அண்ணன் - தம்பி உறவு எங்களுக்குள்ளும் இருக்கிறது என்கிறார் நடிகர் சூரி.
அவர் நேர்கணால் ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பகிர்ந்துக்கொண்டவை :
”நானும் தம்பி சிவாவும் மனம்கொத்தி பறவையில இருந்தே நண்பர்கள். நண்பர்களாகத்தான் பழக ஆரமிச்சோம். தம்பி அண்ணனுதான் பழகுவோம். என் குடும்பம் பற்றி நிறைய தெரிந்துக்கொள்ள ஆரமித்துவிட்டார். நான் எனது குடும்பம் பற்றி நிறைய பகிர்ந்துக்கொள்வேன். கூட இருந்து நிறைய பார்த்திருக்கிறார். தம்பி எனது குடும்பதோட ரொம்ப கணெக்ட் ஆயிட்டாரு.நாங்க கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்றோம். நான் என் சூழல் காரணமாக இங்கே இருக்கேன். என் தம்பிக்கு குடும்பத்தை ரொம்ப பிடிக்கும்.
என் தம்பி இப்போ இந்த நிலையில இருக்கிறான் என்றால் அது அவனுடைய மரியாதை , பணிவு , தொழிலை அளவு கடந்து நேசிக்கும் விதம்தான். சில நேரங்களில் எனக்கே தெரியாமல் எங்க வீட்டுக்கெல்லாம் போவார். என்னையும் அவங்க குடும்பத்துக்கு ரொம்ப பிடிக்கும்.சினிமாவை தாண்டி , நடிப்பை தாண்டி ஒரு சொந்தம். சீமராஜா படம் சமயத்தில் அவர் ரொம்ப கஷ்டத்தை சந்திச்சார். அப்போ நான் போன் பண்ணி பேசுவேன். என் குடும்பமும் தம்பிக்கிட்ட பேசினியானு அடிக்கடி கேப்பாங்க. சீமராஜா அப்படி ஒரு மோசமான படம் இல்லைங்க.தோற்ற படம் இல்லை , தோற்க்கடிக்கப்பட்ட படம் . அந்த படத்துக்கு அவ்வளவு மோசமா ரிவியூ பண்ணாங்க. பொள்ளாச்சி மாதிரி பரவுனுச்சு. அந்த படத்துல அப்படி ஏதாவது வல்கரான விஷயம் ஏதாவது இருந்துச்சா. ஸ்கிரீனை கிளிக்கும் அளவுக்கு படம் எடுத்தாங்களா இல்லை படத்தில் சொல்லக்கூடாத விஷயத்தை சொன்னாங்களா..எதுவுமே இல்லை. ரொம்ப ஆரோக்கியமான படம் அது.
ஒரு ஹீரோ எடுத்த புதிய முயற்சிதான் அது. மனசு கஷ்டப்படும் அளவுக்கு விமர்சனம் பண்ணாங்க. எல்லா தயாரிப்பாளர்களும் நல்லவங்கதான். ஆனால் அந்த மனுஷன் ரொம்ப நல்லவரு. நிறைய செஞ்சுட்டாரு. அகல கால் வச்சுட்டாரு. புத்திசாலிதனமா இருந்துருக்கலாம் . நாம சிவாவுக்கு ஆறுதல் சொல்லலாம்னு போன் பண்ணா அவர் நமக்கு ஆறுதல் சொல்லுவாரு. சிவா சோர்ந்து , உடைந்தெல்லாம் நான் பார்த்ததே கிடையாது. பண ரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டாரு. அப்போதான் மனசு உடைந்து போயிட்டாரு. அதையெல்லாம் தாண்டி வந்துட்டாரு இப்போ “ என்றார் சூரி