Aparna Balamurali: 'தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க.. வெறுப்பாகுது..' கடுப்பான நடிகை அபர்ணா!
தன்னைப்பற்றி வரும் கேலி, கிண்டல்கள் குறித்து நடிகை அபர்ணா பதில் அளித்துள்ளார்
பொம்மி..
சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. மலையாள நடிகையான அபர்ணாவின் சினிமா தொடக்கம் மலையாளம்தான். அபர்ணா நடித்த முதல் படம் யாத்ரா துடருன்னு. ஆனாலும் ஃபஹத் பாஷிலுடன் நடித்த மஹேஷிண்டே பிரதிகாரம் தான் அவருக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. பக்கத்து வீட்டு பெண்ணாக அப்படத்தின் கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்திபோயிருப்பார் அபர்ணா. இவரின் பெற்றோர் சோபா, பாலமுரளி இருவருமே திரைத்துரையில் இசைக்கலைஞர்கள். தந்தை பாலமுரளி அங்கு பிரபல இசையமைப்பாளர். தாய் சோபா வழக்கறிஞர். கூடவே பாடகர். பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சிப்பிடி, மோகினி ஆட்டத்திலும் தேர்ந்தவர்.
தெரிஞ்சுகிட்டு பேசுங்க..
அபர்ணாவுக்கு நடிப்பது மட்டுமின்றி பாடல் பாடுவதும் பிடித்தமான ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்தால் அவர் இசையில் எனக்குப் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுவிடுவேன் என தன்னுடைய ஆசையைக் குறிப்பிட்டுள்ளார் . அந்த அளவுக்கு பாடல் மீது அலாதி பிரியம் உண்டு. இதற்கிடையே அபர்ணா மீதான கேலி கிண்டல்கள் இணையத்தில் தொடர்ந்து வருகின்றன. உடல் எடை அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு அபர்ணா பாலமுரளியை ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் கேலி செய்து வருகின்றனர்.
இது குறித்து மனம் திறந்த அபர்ணா, குண்டாகிவிட்டதாக இணையத்தில் பலர் கேலி செய்கின்றனர். அதற்கு முன்னதாக, அந்த நபர் ஏன் உடல் எடை அதிகரித்தார்? அதற்கான காரணம் என்னவென்பதை தெரிந்துகொண்டு பேச வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, எப்போது திருமணம், எந்த நடிகருடன் நடிக்க ஆசை போன்ற வழக்கமான கேள்விகள் ஒருமாதிரி வெறுப்பைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, உடல் பிரச்சினை காரணமாக அபர்ணாவின் உடல் எடை அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
View this post on Instagram
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய அபர்ணா, க்ளாமர் ரோலில் நடிப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களின் நம்பிக்கையை பார்த்து நான் ரசித்திருக்கிறேன். பிகினி அணிவது தவறில்லை. எனக்கு இப்போ எனக்கு என்ன உடை கம்ஃபர்டபிளாக இருக்கிறதோ அதில் நடிக்கிறேன். எனக்கு எப்போது க்ளாமர் ரோல், க்ளாமர் உடை கம்ஃபர்டபிளாக இருக்கிறதோ அப்போது அதை அணிந்து கொள்வேன். மற்றபடி இப்போ எனக்கு நான் எப்படி இருக்கிறேனோ அதுவே நன்றாக இருக்கிறது.
நான் திரைத்துறைக்கு வந்த பின்னர் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் நோ சொல்வது. எனக்கு ஒவ்வாத கதை, நபர், நட்பு என எல்லாவற்றையும் ஸ்ட்ராங் நோவால் மறுக்கிறேன் எனத் தெரிவித்தார்.