விருமன் வைத்த விருந்து... புகழ்ந்து பதிவிட்ட சோனி நிறுவனம்!
கடந்த காலத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் பெற்ற வசூலை விருமன் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தயாரிப்பில், நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்த விருமன் திரைப்படம் வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியான மூன்றாவது நாளில், படத்தின் ஓப்பனிங் பாடலான ‛வானம் கிடுகிடுங்க...’ பாடலின் முழு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம்.
வெளியாகி 24 மணி நேரம் நிறைவடைவதற்குள் 2 லட்சத்து 83 ஆயிரத்து 40 பேர் (செய்தி எழுதும் நேரம் வரை) அந்த பாடலை பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 19 ஆயிரம் பேர் லைக் அளித்துள்ளனர். தியேட்டரில் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ரெஸ்பாஸ்ன்ஸ் காரணமாக, ஓப்பனிங் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லால், படம் வெளியான அன்று 8.1 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் 8.45 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அதை விட, மூன்றாவது நாளில் மட்டும் 9.1 கோடி ரூபாய் வசூலை பெற்ற விருமன் திரைப்படம், கார்த்திக் படத்தின் அதிகபட்ச வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. வெளியான மூன்று நாளில் மட்டும் 25.75 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ள விருமன், 4வது நாளும் விடுமுறை நாள் என்பதால், நல்ல வசூலை குவித்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் , விருமன் படத்தின் வெற்றி குறித்து அதன் ஆடியோ உரிமையை பெற்ற சோனி நிறுவனம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோனி, திரையரங்களில் விருமன் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த வாரம் முழுதும் போதுமான வசூலை பெற்றால், கடந்த காலத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் பெற்ற வசூலை விருமன் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.