மேலும் அறிய

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 

Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்”

வில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). 

இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி  வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். 

இயக்குநர் S சிவராமன் பேசியதாவது

இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால்  இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன். மிக அற்புதமாக இசையைத் தந்துள்ளார். இப்படம் ஒரு உயில் சம்பந்தப்பட்டது, உயில் பல குடும்பங்களில் பிரச்சனையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. எடிட்டர் லெனின் சார் படம் பார்த்து என்னைப் பாராட்டினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கண்டிப்பாக மக்கள் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன். விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபிஸராக நடித்துள்ளார். அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் அவருக்கு நன்றி.  இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக்சன் படமல்ல. ஃபீல் குட் படம்.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகை அலீகியா பேசியதாவது

திரையுலகிற்கு நான் புதியவள். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றி. சோனியா மேடம் கூட நடித்தது நல்ல அனுபவம். என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.  இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். 

இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  

வழக்கறிஞராக பணியாற்றிய S சிவராமன்,  தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. 

உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

தொழில் நுட்ப குழு 

இயக்கம் : S சிவராமன் 
தயாரிப்பு: Foot Steps Production
இணை தயாரிப்பு: Kothari Madras International Limited
இசை: சௌரப் அகர்வால் 
ஒளிப்பதிவு  : TS பிரசன்னா 
எடிட்டர்: G தினேஷ் 
பாடியவர்: கலை குமார் 
கலை இயக்குனர்: மணி 
நடன இயக்குனர்: அபு & சால்ஸ் சண்டைக்காட்சிகள்: தீ கார்த்திக் 
வசனம் : எஸ் சிவராமன் 
ஒலி வடிவமைப்பாளர்: RK அஸ்வத் (DAW RECORDS) 
ஃபோலே வடிவமைப்பாளர்: R.ராஜ் மோகன் டப்பிங் மற்றும் மிக்சிங் : DAW RECORDS டப்பிங் இன்ஜினியர்: வசந்த் 
DI & VFX:  Fire Fox Studios
 போஸ்டர் : வியாகி 
ஸ்டில்ஸ்: நவின் ராஜ் 
டைட்டில் வடிவமைப்பு: சசி & சசி விளம்பர கட்ஸ் : அரவிந்த்  B  ஆனந்த் 
ஒப்பனை: பாரி, கயல் 
மக்கள் தொடர்பு : பரணி அழகிரி
புரமோசன் : Starnest Media 
தயாரிப்பு நிர்வாகி: ரகுவரன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget