Sivangi Next Single: அடுத்த சிங்கிள் ரெடி... அப்டேட் கொடுத்த சிவாங்கி...!
பிரபல நடிகையான சிவாங்கியின் அடுத்த சிங்கிள் வெளியாகும் தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.
View this post on Instagram
இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே இந்த ஷோவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் பார்க்க வந்தனர். இந்நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஒளிப்பரப்பாகி வரும் குக்வித் கோமாளி சீசன் 3 யிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
View this post on Instagram
சின்னத்திரையில் கிடைத்த புகழின் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சிவாங்கி காலடி பதித்துள்ளார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் சிவாங்கி பாடி நடித்த 'NO NO NO NO’ பாடல் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், சிவாங்கியின் அடுத்த சிங்கிள் பாடலான “வெண்ணிலவும் பொன்னி நதியும்” பாடல் உருவாகியுள்ளது. காதலர் தின பரிசாக உருவாகியுள்ள இந்தப்பாடல் நாளை இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்க் மியூசிக் இந்தப்பாடலை வெளியிடுகிறது.