Sivakarthikeyan Speech: ‛இவங்கள வைச்சுக்கிட்டு அத பத்தி பேசலாமா..’ சோப்பு போட்ட தொகுப்பாளரை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்!
இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து விட்டு ராஜமெளலி சார் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என்று தெரியவில்லை என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

RRR படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னை ட்ரேடு சென்டரில் நடந்தது. ராஜ மெளலி, ராம் சரன், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவில், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ மகதீரா படம் பார்த்ததிலிருந்து, நான் ராஜமெளலியின் மிகப் பெரிய ஃபேனாக மாறிவிட்டேன். நான் ஈ படம் பார்த்த போது ஒரு ஈயை வைச்சு இவ்வளவு பெரிய சூப்பட் ஹிட் படம் கொடுக்க முடியுமா அப்படினு பயங்கர ஆச்சரியமா இருந்துச்சு.
அப்போது‘ ஈ’வைச்சே ஒரு படம் எடுக்குறாங்க அப்படினா நம்மள வைச்சும் படம் எடுப்பாங்க அப்படினு கான்பிடன்ஸ் வந்துச்சு. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து விட்டு ராஜமெளலி சார் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. உண்மையில் அவர் ட்ரூ இன்ஸ்பிரேஷன்.
ராம்சரண் ஒரு முறை என்னுடைய படங்களையெல்லாம் அவர் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதாக என்னிடம் கூறினார். உண்மையில் ராம்சரண் சார் ரொம்ப ரொம்ப ஸ்வீட்.. ஜூனியர் என்.டி.ஆர் கிட்ட சாதரண ரோலை கொடுத்தாலே டைகர் மாதிரிதான் பண்ணுவாரு. அப்ப இந்த ரோல்ல அவர் எப்படி பண்ணிருப்பாரு நான் யோசிச்சுகிட்டு இருக்கேன். இந்தப் படம் எல்லா ரெக்கார்டுகளையும் உடைக்க வேண்டும். இந்தப் படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவை முன்னிறுத்துகிறது. எத்தன நாள்தான் நாங்க வெளிநாட்டு படங்களை பார்த்தோம் என்று சொல்லிக்கொண்டே இருப்பது. நம்மளும் அமெரிக்காவுக்கு போன் பண்ணி எங்களுடைய இந்தியப் படங்களை பார்த்தீர்களா என்று கேட்க வேண்டாமா..
❤️🔥❤️🔥❤️🔥
— RRR Movie (@RRRMovie) December 27, 2021
#RRRPreReleaseEvent #RoarOfRRRinChennai pic.twitter.com/QcQB8RcJWa
கொரோனா பரவலுக்கு பிறகு வருடத்தின் முதல் பெரிய படமாக RRR படம் படமும் அடுத்ததாக அஜித் சாரின் வலிமை படமும் வெளியாக இருக்கிறது. அதனால் அடுத்த வருடம் நிச்சயம் பெரிதாக இருக்கப் போகிறது.
இதனிடையே, தொகுப்பாளர் சிவகார்த்தியேன் ‘டான்’ படத்தில் நன்றாக நடனம் ஆடியிருப்பதை மெச்சி பேசிக் கொண்டிருந்தார். சுதாரித்துக் கொண்டு உடனே அவரை பேசுவதை நிறுத்திய சிவகார்த்திகேயன் ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் வைத்து நாம் நடனத்தை பற்றி பேசக்கூடாது” என்றார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

