மேலும் அறிய

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ

கேரளாவின் காசர்கோடு ரயில் நிலையம்: ஜப்பானை மிஞ்சும் தூய்மை, வியப்பில் Vlogger!

பொதுவாக பயணம் செய்யும் நாம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களின் அசுத்தம் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்போம். கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாமே என்று அங்கலாய்த்து இருப்போம். ஆனால், கேரளாவில் உள்ள ஒரு ரயில் நிலையம் இணைய வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடந்தது என்ன?

ஆக.12 அன்று, Backpacker Anmol என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் டிராவல் Vlogger ஆன அன்மோல், கேரளாவின் காசர்கோடு ரயில் நிலையம் குறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாகப் பகிர்ந்திருந்தார்.

சிறுவயது முதலே கேரளா கல்வியறிவு பெற்ற, முற்போக்கான மக்களின் மாநிலம் என்று கேள்விப்பட்டிருப்பதாகவும், தற்போது காசர்கோடு ரயில் நிலையத்தின் தூய்மையைப் பார்த்த பிறகு அதை நேரில் உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஜப்பான்....

"இது ஜப்பான் அல்ல, கேரளா" என்ற தலைப்பிட்ட அந்த வீடியோவில் பேசிய அன்மோல், "நான் கேரளாவில் இருக்கிறேனா அல்லது ஜப்பானில் இருக்கிறேனா என எனக்கே சந்தேகமாக இருக்கிறது. நான் கேரளாவின் வடக்குப் பகுதியில் உள்ள முதல் மாவட்டமான காசர்கோட்டில் உள்ளேன். இங்குள்ள பிளாட்பாரங்கள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளங்களில் ஒரு சிறு குப்பையைக் கூட பார்க்க முடியவில்லை. ஏதோ ஜப்பான் ரயில் நிலையத்தில் நிற்பது போல உணர்கிறேன்" என ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

பொதுவாக இந்திய ரயில் நிலையங்களில் வேலை செய்யாத ஏடிஎம்கள், அசுத்தமான குடிநீர் பகுதிகள் மற்றும் காத்திருப்பு அறைகள் குறித்து மக்கள் புகார் கூறுவதுண்டு. ஆனால், இங்கு பளபளக்கும் தரைகள் மற்றும் நாற்காலிகளுடன் கூடிய சுத்தமான காத்திருப்பு அறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, இயங்கும் ஏடிஎம்கள் மற்றும் ஆண், பெண்களுக்கான தனித்தனி தூய்மையான கழிப்பறைகள் இருப்பதைக் கண்டு அன்மோல் வியந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ਅਨਮੋਲ ਸੰਧੂ | Punjabi Traveler 🇮🇳 (@backpacker_anmol)

மசாஜ் நாற்காலிகள்

மேலும், அங்குள்ள கேபினில் செயல்படும் மசாஜ் நாற்காலிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்ததையும் பகிர்ந்தார். எங்கும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததால், மக்களும் குப்பைகளை வெளியே வீசாமல் அந்த இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தனர்.

"இந்தியாவில் இவ்வளவு சுத்தமான, அழகான ரயில் நிலையத்தை என் வாழ்வில் பார்ப்பது இதுவே முதல்முறை. கேரளாவில் இது எனக்கு முதல் நாள்தான், ஆனால் இந்த மாநிலம் கண்டிப்பாக என் மனதை வெல்லப் போகிறது" என அன்மோல் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் கேரள மக்களின் பொறுப்பை வெகுவாகப் பாராட்டித் தள்ளி உள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரிவாக்கம்! வேகம், கட்டணம், வசதிகள் எப்படி இருக்கும்?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Top 10 Headlines: தமிழகம் முதல் இந்தியா வரை… செப்டம்பர் 9-ன் முக்கிய செய்திகள் என்னென்ன?
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!
Chennai Bengaluru Expressway: சென்னை–பெங்களூரு பயணிகளுக்கு ஷாக்! விரைவுச் சாலை திறப்பு மேலும் ஓராண்டு தாமதம் – 2028 தான் இலக்கு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
Karthigai Deepam:
Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?
"வேடிக்கை பாத்தவருக்கு தாமரைப்பட்டயமா.." இந்தியன் பட காட்சியால் மு.க.ஸ்டாலினை சீண்டும் தவெக!
DMK Protest: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
Honda Elevate on EMI: அற்புதமான ஹோண்டா எலிவேட் SUV வாங்குற பிளான் இருக்கா.? ரூ.2 லட்சம் முன்பணம்; EMI எவ்வளவு வரும்.?
அற்புதமான ஹோண்டா எலிவேட் SUV வாங்குற பிளான் இருக்கா.? ரூ.2 லட்சம் முன்பணம்; EMI எவ்வளவு வரும்.?
Embed widget