மேலும் அறிய

Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

ஷங்கர் சார் என்னை அழைத்து, ஒரு படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார். நான் எதுவும் கேட்காமல் ஓகே என சொன்னேன். ஆனால் அந்த படம் பற்றி எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை என ஸ்ரேயா கூறியுள்ளார்.

பிரபல நடிகை ஸ்ரேயா, சிவாஜி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம். 

கடந்த 2006ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்த படம் “சிவாஜி - தி பாஸ்”. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ஸ்ரேயா சரண் ஹீரோயினாகவும் நடித்தனர். மேலும் விவேக், வடிவுக்கரசி, சுமன், மணிவண்ணன், ரகுவரன், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். நயன்தாராவும் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

இப்படியான நிலையில் மழை படம் மூலம் 2005ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரேயா தனது 3வது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தது அந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ஒரு நேர்காணலில் சிவாஜி படத்தில் நடித்தது பற்றி அவர் பேசியுள்ளார்.

அதில், “ஷங்கர் சார் என்னை அழைத்து, ஒரு படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார். நான் எதுவும் கேட்காமல் ஓகே என சொன்னேன். அந்த படம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முதலில் இந்த படத்தில் என்னுடன் நடிக்கப்போவது யார் என்பது கூட தெரியாது. 

சிவாஜி படத்தின் தொடக்க விழா அன்று எனக்கு வேறு ஷெட்யூல் இல்லாததால் நான் சென்னை சென்றேன். அந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இருந்தனர். சரி இது மிகப்பெரிய படம் என்பது எனக்கு புரிந்தது. அந்நிகழ்ச்சியில் கூட இவ்வளவு பெரிய ஆட்கள் வந்திருக்கும் இந்த படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சொன்னேன். 

இதன்பிறகு இயக்குநர் ஷங்கர் தான் நீங்கள் நடிக்கப்போகும் படத்தின் ஹீரோவைப் பார்க்கலாம் வாருங்கள் என அழைத்தார். அப்போது தான் எனக்கு ரஜினி தான் சிவாஜி படத்தின் ஹீரோ என்பதே தெரிந்தது. உடனே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாரான அவருடன் இணைந்து நடிப்பு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் ஷூட் செல்லும் முன் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என ஷங்கரிடம் சொன்னேன். 

சிவாஜி பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் என்னை மிகவும் இயல்பாக இயங்க வைத்தார். ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணமெல்லாம் உங்களுக்கு வர விட மாட்டார். அந்தளவு ரஜினிகாந்த் எளிமையாக பழகுவார். 10 நிமிடங்களில் அவர் உங்கள் சிறந்த நண்பரைப் போல உணர வைப்பார். கடின உழைப்புதான் மிக முக்கியமான விஷயம் என்று  என்னிடம் எப்போதும் சொல்வார். ஷூட்டிங்கிலும் செம ஜாலியாக நடந்து கொள்வார் என ஸ்ரேயா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?

Embed widget