STR48 : இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டும் போஸ்டர்... சிலம்பரசன் 48 பர்ஸ்ட் லுக் வெளியானது..
சிலம்பரசன் நடிக்கும் எஸ்.டி ஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.
சிலம்பரசன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம் நல்ல வெற்றி பெற்றது. தற்போது சிம்பு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறார். இந்த வரிசையில் அடுத்தபடியாக அவர் நடிக்க இருக்கும் படம் எஸ்.டி.ஆர் 48.
எஸ்.டி ஆர் 48
இதனைத் தொடர்ந்து தற்போது சிலம்பரசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரின் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் சிலம்பரசன் காணப்படுகிறார். சரித்திர கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது
Unleash the valour and witness this remarkable journey from #STR48.🌟 Wishing @SilambarasanTR_ a happy birthday!#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #HBDSilambarasanTR
— Raaj Kamal Films International (@RKFI) February 2, 2024
@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM… pic.twitter.com/8gIeiwiwUM
நாளை நடிகர் சிலமரசன் தனது பிறந்தநாளைக் கொண்டாட இருப்பதையொட்டி அவரது ரசிகர்களுக்காக இந்த போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் செட் அமைக்கப் பட்டு எடுக்கப்பட இருப்பதாகவும் பெரிய அளவிலான வி.எஃப். எக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிலம்பரசன் தந்தை மகனாக இருக்கலாம் என்று யூகங்கள் முன்வைக்கப் படுகின்றன.
எஸ்.டி.ஆர் 48 படத்தைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்க ஐஷரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மேலும் ஒரு படம் நடித்து தருவதாக தெரிவித்துள்ளார் என்று தயாரிப்பாளர் ஐஷரி கனேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Actor Vijay: ஆரம்பமே அதிரடி: அரசியல் சூழலை சரமாரியாக விமர்சித்த விஜய்- பயணிக்கப்போகும் பாதை என்ன?
Tamizhaga Vetri Kazhagam : விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!