மேலும் அறிய

Ravi Mohan: பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பு.. வாழ விடுங்க.. ரவிமோகன் வேதனை!

பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை கூட பெண்களை விட ஆண்கள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்துள்ளது என நடிகர் ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

ஜெயம் ரவி டூ ரவி மோகன்

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமான ரவி அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் களமிறங்கி அசத்தினார். கடைசியாக பராசக்தி படத்தில் நடித்த அவர் அந்த படத்தின் இருந்து தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இப்போது யோகிபாபுவை வைத்து படம் ஒன்றையும் இயக்குகிறார். 

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை

ரவி மோகன் பிரபல பெண் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ரவி மோகனுக்கு பாடகி கெனிஷாவுடன் இருந்த உறவே குடும்பம் பிரிய காரணம் என ஆர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால் தான் தங்க முட்டையிடும் வார்த்தை போல நடத்தப்பட்டேன் எனவும் ரவி மோகனும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

தற்போது அவர் பாடகி கெனிஷாவுடன் தான் சுற்றி வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கெனிஷா - ரவிமோகன் தம்பதியினர் ஆரம்பத்தில் நண்பர்கள் என சொல்லி வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்ஸ்டாவில் திடீர் பதிவு

இந்த நிலையில் ரவிமோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வீடியோவில், “என்னை மாற்ற முடியும் என்பதை அறியும் அளவுக்கு பணிவு. என்னைப் போல யாரும் இல்லை என்பதை அறியும் அளவுக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது” என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

மேலும் அந்த பதிவில், “நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கினேன். நீங்கள் சொல்ல விரும்பும் அனைத்தையும் மீண்டும் சொல்லுங்கள், ஏனென்றால் பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அதைக் கூட நம் நீதித்துறை புரிந்திருக்கிறது. ஒருநாள் என் மனதையும், நான் நேசிக்கும் மக்களுக்காக செய்தவற்றையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தயவுசெய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்; உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதைக்குத் திரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.  அவருக்கு ரசிகர்கள் ஆதரவும், ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget