மேலும் அறிய
Tamizhaga Vetri Kazhagam : விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!
Tamizhaga Vetri Kazhagam : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

விஜய் ரசிகர்கள்
1/9

தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் கட்சியின் நிர்வாகிகள் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
2/9

தேங்காய் உடைத்து, மனமார பிரார்த்தனை செய்து கொண்டனர்.
3/9

கோவை கணபதி பகுதியில் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
4/9

அதனை தொடர்ந்து, கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
5/9

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையொட்டி 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
6/9

மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
7/9

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையொட்டி 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் திருவண்ணாமலையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
8/9

சீர்காழியில் அம்பேத்கர் சிலைக்கு முன் விஜய்யின் புகைப்படத்துக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
9/9

கட்சி வளர்ச்சியடைய வேண்டி மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நூதன முறையில், மண்டியிட்டு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வேண்டுதல் செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Published at : 02 Feb 2024 02:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion