Sibiraj: ‛கூகுள் ஃபே நம்பர் அனுப்புங்க எலான் மஸ்க்’ பங்கம் செய்த சிபிராஜ்!
''எட்டு அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்" என்று ட்வீட் செய்தார். எலான் மஸ்கின் இந்த ட்வீட்டிற்கு நடிகர் சிபி சத்யராஜ் நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமீபத்தில் மைக்ரோபிளாகிங் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதை அடுத்து, ட்விட்டரின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். இந்நிலையில் புதிதாக அவர் ஒரு அறிவிப்பை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அறிவிப்பு என்னவென்றால்… ட் விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பெயருக்கு அருகில் ப்ளூடிக் வழங்கப்பட்ட கணக்குகள் சிலருக்கு இருக்கும். அந்த கணக்குகள் குறிப்பிட்ட சமூக வலைதளத்தால் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் ஆகும். இந்த கணக்குகளை பிரபலங்களும், நடிகர்களும், விளையாட்டு வீரர்களும், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய புள்ளிகள் பயன்படுத்துவர். இந்நிலையில் ப்ளூ டிக் வழங்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்துவோர் அனைவரும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை நேற்றைய தினம் எல்லார் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இதற்கு முன்னரே ப்ளூடிக் கணக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தபோது, மாதம் 20 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் எலான் மஸ்க் மாதம் தோறும் 8 அமெரிக்க டாலர்கள் ப்ளூடிக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். எட்டு டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் ரூபாய் 660 ஆகும். இந்த அறிவிப்பை பல தரப்பினரும் பல தரப்பில் விமர்சித்து வருகின்றனர்.
To all complainers, please continue complaining, but it will cost $8
— Elon Musk (@elonmusk) November 2, 2022
அதற்கு பதில் அளிக்கும் விதமாக எல்லார் மஸ்க்… "குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருங்கள்…ஆனால் எட்டு அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்" என்று ட்வீட் செய்தார்.
View this post on Instagram
எலான் மஸ்கின் இந்த ட்வீட்டிற்கு நடிகர் சிபி சத்யராஜ் நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022
நடிகர் சிபி சத்யராஜ் தமிழ் திரைப்பட நடிகரும், பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் ஆவார். ப்ளூடிக் பயனாளர்கள் மாதம் தோறும் 8 டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற மஸ்கின் ட்வீட்டிற்கு "தயவு செய்து உங்கள் google pay நம்பரை அனுப்புங்கள் என ரீட்வீட் செய்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த வேடிக்கையான பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மஸ்கின் அதிரடி அறிவிப்புகளுக்கு பல தரப்பினரும் பல விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நடிகர் சிபியின் செயல் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.