Shruthi Narayanan: ஸ்ருதி நாராயணன் படத்துக்கே தியேட்டரே கிடைக்கல.. ஃபீல் பண்ணி பேசிய கட்ஸ் பட டைரக்டர்
Shruthi Narayanan: சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ள கட்ஸ் படத்தை வெளியிட போதியளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று இயக்குனர் ரங்கராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன், தீனா, பிர்லா போஸ் உள்ளிட்ட பலரும் நடித்து ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். இந்த படத்தில் ரங்கராஜ் கதாநாயகனாகவும், ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஸ்ருதி நாராயணன் நடித்த கட்ஸ்:
இந்த படத்தின் இயக்குனர் ரங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். போராடி வந்திருக்கிறோம். அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஏப்ரல் 18ம் தேதியே படம் வெளியீட்டிற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பின்னர், மே 23ம் தேதி திட்டமிட்டோம். அப்போதும் திரையரங்கம் கிடைக்கவில்லை.
அப்போது, திரையுலக ஆசான் உலக நாயகன் கமலின் தக்ஃலைப்புடன் படம் வரட்டும் என்று 6ம் தேதி ரிலீஸ் திட்டமிட்டோம். அப்போதும் திரையரங்கம் கிடைக்கவில்லை. எனக்கு என்ன பண்றதுனு தெரியவில்லை. அது ஏன்? அப்புறம் எப்படி நான் ரிலீஸ் பண்றது?
ஏன் தியேட்டர் கொடுக்கவில்லை?
என் தலைவர் படம் கமல்ஹாசன் படம் வரும்போது என் படம் வரனும். கமல் என்ற 3 வார்த்தையை மட்டும் சுவாசிச்சுகிட்டு இருக்கேன். நான் 36 வருடமாவது அவர் போஸ்டரில் தொடங்கித்தான் நாளை தொடங்குவேன். தூங்கும்போது அவர் போஸ்டரைப் பார்த்துட்டுதான் தூங்குவேன்.
நான் நேசிக்கும் என் தலைவன் படம் வரும்போது, ரசிகன் படம் வந்தால் எப்படி இருக்கும். அதைவிட வேறு என்ன இருக்கிறது? ஆனால் தியேட்டர் கிடைக்கவில்லை. எங்களுக்கு குறிப்பிட்ட தியேட்டர்கள் கொடுங்கள். ஏன் கொடுக்க மாட்டேங்குறீர்கள்.
தியேட்டர் கிடைக்கல:
என்னைப் போல பல தயாரிப்பாளர்கள் கஷ்டபட்டு தியேட்டர் கிடைக்கவில்லை. பெரிய படங்கள் முன்கூட்டியே வித்துடுவார்கள். எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு எந்த படமும் நஷ்டம் இல்லை. ஆனால், எங்களிடம் தியேட்டரில் படத்தை ரிலீஸ் பண்ணிட்டு வாங்க.
அப்புறம் நாங்க வாங்கிக்குறோம்னு சொல்றாங்க. இன்னைக்கு வர எஃப்.எம்.எஸ். விக்கல. ரிலீஸ் பண்ணலாம்னு போன தியேட்டர் கிடைக்கல. சின்ன படம் பண்ணமாட்டோம்னு சொல்றாங்க. அது ஏன்?னு தெிரியல. படம் தரமில்லனா சொல்லுங்க. நீங்க சொல்றதை கேக்குறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கதாநாயகனாக நடித்துள்ள ரங்கராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல நடிகை ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்ச்ரேக்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். மனோஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சித் எடிட்டிங் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படம் வெளியாகும்போது வளரும் நடிகர்கள், அறிமுக நடிகர்களின் படங்களுக்கு போதியளவு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.





















