சொல்லவேண்டிய இடத்துல கலைஞரைப் பத்தி சொல்லித்தான் ஆகணும்.. வைரலாகும் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி
நாடக கம்பெனியில் பெண்கள் வேசம் போட்டவர்கள் தான் சினிமாத்துறையில் நல்ல இடத்தில் உள்ளார் எனவும், எந்த வேடத்தில் நடிக்கிறோம் என்றில்லை நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என சிவாஜி தெரிவித்துள்ளார்.
சினிமா உலகத்தில் மாற்றம் ஏற்படுத்தியது கலைஞரின் வசனம் தான் என்றும், அவருக்கு ஈடாக யாருமே இல்லை என்று சொன்னாலும் இந்த உலகமே ஒத்துக்கொள்ளும் என்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்.
வீரபாண்டிய கட்டபொம்மன், அரிச்சந்திரர், கப்பலோட்டிய தமிழன், இராஜ இராஜ சோழன், போன்றவற்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நம் கண்முன்னே கொண்டுவந்தவர் தான் நடிகர் சிவாஜி கணசேன். வீர வாசனங்களின் மூலம் மக்களிடையே பிரபலமான சிவாஜிக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால், நாடகங்களில் தனது பயணத்தைத் தொடங்கினார். பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இப்படி தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான காதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தான் இந்த அளவிற்கு புகழ் பெற்றுள்ளார்.
இப்படி நடிப்பை மட்டுமே உயிர் மூச்சாகக்கொண்ட சிவாஜி, குடும்பத்தில் யாரும் சினிமாத்துறையில் இல்லாத போது, நான் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தேன் எனவும், என்னுடைய வாழ்க்கை விசித்திரமானது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை எப்போதும் மறக்கமுடியாது எனவும், நாடகத்துறைக்கு பிறகு, சினிமாவில் நுழைந்த நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன் எனவும், வாயில் கூழாங்கல்லைப்போட்டால் எப்படி பேசுவார்களோ அப்படி பேசுகிறேன் என்பது போன்ற கமெண்ட்கள் எல்லாம் வந்தது. இந்த பேச்சைக்கேட்ட நான் வெளியில் வந்து அழுத போது, எனக்கு கிருஷ்ணர் தான் ஆறுதல் சொன்னார். மேலும் உன்னை எப்படியெல்லாம் பேசுகிறார்களோ கவலைப்படாதீர்கள். ஒருநாள் வெற்றி பெற்றால், அனைவரையும் வந்து உன் காலில் விழுவார்கள் என ஆறுதல் கூறினார். இந்த வார்த்தைகள் தான் என்னை இந்த அளவிற்கு வெற்றி பெறச்செய்தது. இதனால் தான் எப்போதும் பார்த்தாலும் சாஷ்டாங்கமாக காலில் விழுவேன் என தெரிவித்துள்ளார்.
இதோடு பராசக்தி படத்தில் ஓடினேன், ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வர ஓடினேன் என்று பேசிய வசனம் இந்த அளவிற்கு ரீச் ஆனதுக்கு கலைஞரின் வசனம் தான் காரணம் என்றும், இரண்டு பேருக்கும் உள்ள உறவு எப்போதும் மாறாது என பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கலைஞர் மாமேரும் எழுத்தாளர் என சொல்லும் அவரது வசனத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என சொன்னால் உலகமே ஒத்துக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பராசக்தி படத்துல தான் நடித்தேன் என்றும், நாடகத்தில் தான் நடிக்க வில்லை என தெரிவித்த அவர், கதாநாயகியாக நடித்தவர் முதல் மரியாதை படத்தில் செருப்பு தைக்கிற தொழிலாளியாக இருந்தவர் தான் என்றும் ஆனால் இதனை யாரும் நம்ம மாட்டார்கள் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதோடு நாடக கம்பெனியில் பெண்கள் வேசம் போட்டவர்கள் தான் இப்போது சினிமாத்துறையில் நல்ல இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எந்த வேடத்தில் நடிக்கிறோம் என்றில்லை. நான் நல்ல கதாபாத்திரம் கொடுத்தாலும், அது வயதானதாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன் என்றும் நாடகத்தில் சின்ன வயசுல இருக்கும் போதே பலதரப்பட்ட வேஷங்களில் நடித்திருக்கிறேன் என பெருமையுடன் கூறியுள்ளார். குறிப்பாக ஏவி செட்டியார் எடுத்துள்ள அனைத்துப்படங்களும் சமூகத்திற்கு நல்லதைத் தான் எடுத்துரைக்கும் என சிவாஜி தெரிவித்துள்ளார்.