
Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி
சிவசங்கரின் மாஸ்டர் சிகிச்சைக்கு உதவுவதாக நடிகர் சோனு சூட் உறுதியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் சிவசங்கர் மாஸ்டரும் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் அதிகமான படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்தவர்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் பல பெரிய ஹீரோக்களை ஆட்டுவித்தவர் சிவசங்கர் மாஸ்டர். அஜித்திற்கு நடனம் பெரிதாக வராது என விமர்சனங்கள் எழுந்த காலக்கட்டத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார்.
பரதநாட்டிய கலைஞராக நடித்த அஜித் சிவசங்கர் மாஸ்டரின் கோரியோவால் பரதநாட்டியத்தை அருமையாக ஆடியிருப்பார். அதேபோல் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற புகழடைந்த பாடலான மன்மத ராசா பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர்தான் நடனம் அமைத்தார். அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த நடன அசைவுகளும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
அதுமட்டுமின்றி இவர் தீரா தீரா தீரா பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். நடன அமைப்பு மட்டுமின்றி சிவசங்கர் மாஸ்டர், வரலாறு, ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
Noted Choreographer #ShivaShankar Master affected with #COVID19 and now in critical condition. Due to expensive treatment the family is unable to pay the bills. Please help.
— Vamsi Kaka (@vamsikaka) November 24, 2021
For Contact
Ajay Krishna (Son)
9840323415 pic.twitter.com/nTHwS8ivnh
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லை எனவும் திரையுலகத்தினர் உதவ வேண்டுமெனவும் அவரது மகன் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து சோனு சூட் சிவசங்கரின் சிகிச்சைக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.
Iam already in touch with the family,
— sonu sood (@SonuSood) November 25, 2021
Will try my best to save his life 🙏 https://t.co/ZRdx7roPOl
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரை காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்”என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

