மேலும் அறிய

தினமும் 100 சிகரெட்.. 30 ப்ளாக் காஃபி.. இதுதான் நான்... - மனம் திறந்த பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்!

கடந்த 2011ஆம் ஆண்டு, ஒரு நேர்காணலில் தன்னுடைய மோசமான பழக்கம் குறித்து மனம்திறந்த நடிகர் ஷாரூக் கான், தினமும் 100 சிகரெட்களைப் புகைப்பதாகவும், சுமார் 30 கப் பிளாக் காஃபி குடிப்பதாகவும் கூறியிருந்தார்.

பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தான் புகைபிடிப்பதற்கு அடிமையாக இருப்பதைப் பலமுறை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு, ஒரு நேர்காணலில் தன்னுடைய இந்த மோசமான பழக்கம் குறித்து மனம் திறந்த நடிகர் ஷாரூக் கான், தான் தினமும் 100 சிகரெட்களைப் புகைப்பதாகவும், சுமார் 30 கப் பிளாக் காஃபி குடிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த நேர்காணலில் ஷாரூக் கான் பேசியதில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்... 

அதே நேர்காணலில், நடிகர் ஷாரூக் கான் உணவு மீதான அவரது பிரியத்தையும், டெல்லியில் அவரது தந்தை உணவகங்கள் நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவரது தந்தையின் ஸ்பெஷல் உணவு பதானி வகையைச் சேர்ந்தது எனவும், அவரது தாய் ஹைதராபாதி உணவு சமைப்பதில் வல்லுநர் எனவும் தெரிவித்துள்ளார். தனது தாய் உயிருடன் இருந்த வரை, அவர் கையால் சமைத்த உணவையே அவர் சாப்பிட்டு வந்ததாகவும், தாய்மையில் இதுதான் மகத்தானது எனவும் ஷாரூக் கான் கூறியுள்ளார். 

தினமும் 100 சிகரெட்.. 30 ப்ளாக் காஃபி.. இதுதான் நான்... - மனம் திறந்த பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்!

டெல்லி ஹார்பெர் பஜார் பகுதியின் உணவுகளைப் பற்றி பேசிய நடிகர் ஷாரூக் கான், `என் தந்தை உணவகங்கள் நடத்தி வந்தார். பட்டர் சிக்கன், நான் ஆகிய உணவுகளை நான் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறேன். என் தந்தை பதானி உணவுகள் சமைத்தார். என் தாய் ஹைதராபாதி உணவுகளைச் சமைத்து அசத்துவார். என் தாய் அவர் உயிருடன் இருந்த வரை, அவர் கையால் சமைத்த உணவைவே நான் சாப்பிட்டு வந்தேன். அப்போது எனக்கு வயது 26. அவரே உணவைப் பிசைந்து எனக்கு தருவார். எனக்கு இன்னும் எனது கைகளால் உணவு சாப்பிட தெரியாது. நான் கல்வியற்றவனைப் போல இருப்பதாக எனக்கே தோன்றும். இதன் காரணமாகவே, நான் உணவகங்களுக்குச் செல்வது இல்லை. மேலும், நான் முன்பு சாப்பிட்ட உணவுகளை விட தற்போதைய உணவகங்களில் கிடைப்பவை ருசியானவை அல்ல எனக் கருதுகிறேன். என் நண்பர்களும், குடும்பத்தினரும் உணவகங்களுக்குச் சென்றால், உணவு முடிந்த பிறகு என்னை அழைக்க கூறுவேன். நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கு சென்று ஒரு காஃபி பருகுவேன். எனக்கு பிடித்த உணவகம் என்றால் மெக்டானலட்ஸ் என்று கூறுவேன்.. அல்லது கேஎஃப்சி.. ஏனெனில் என் குழந்தைகளுக்கு இவை பிடித்த இடங்கள்.. என் நண்பர்களுடன் அரிதாக உணவகம் செல்லும் பழக்கம் இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். 

தினமும் 100 சிகரெட்.. 30 ப்ளாக் காஃபி.. இதுதான் நான்... - மனம் திறந்த பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்!

தனது உடல்நலம் குறித்து பேசிய நடிகர் ஷாரூக் கான், `நான் தூங்குவதில்லை. சுமார் 100 சிகரெட்களைப் பிடிக்கிறேன். உணவு உண்ண மறக்கிறேன். நான் உணவு உண்ண வேண்டும். உங்கள் படப்பிடிப்பின் நடுவில் இப்போது ஞாபகம் வருகிறது. மேலும், நான் தண்ணீர் குடிப்பதில்லை. தினமும் 30 ப்ளாக் காஃபி குடிக்கிறேன்.. ஆனால் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன்.. என்னை நான் பார்த்துக் கொள்வது குறைவு.. என்னை மற்றவர்கள் பார்த்துக் கொள்வது அதிகம்’ எனவும் தெரிவித்துள்ளார். 

தினமும் 100 சிகரெட்களைப் புகைபிடித்தும், 30 ப்ளாக் காஃபிகளைக் குடித்தும், பாலிவுட் திரைத்துறையின் ஃபிட்டான நடிகர்களுள் ஷாரூக் கானும் ஒருவர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget