மேலும் அறிய

Shaakuntalam: மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட சமந்தாவின் சாகுந்தலம்: விரைவில் ரிலீஸ் தேதி: வருத்தத்தில் ரசிகர்கள்...

சமந்தா நடித்துள்ள 'சகுந்தலா' படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்

மகாபாரதப்  புராணக் கதையின் ஒரு பகுதியான சாகுந்தலா - துஷ்யந்தனின் காதல் கதையை மையாக வைத்து உருவாக்கப்பட்ட 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

சமந்தா நடிப்பில் ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவனத்தை ஈர்த்தது. தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் ‘சூஃபியும் சுஜாதையும்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மணி சர்மா. 

Shaakuntalam: மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட சமந்தாவின் சாகுந்தலம்: விரைவில் ரிலீஸ் தேதி: வருத்தத்தில் ரசிகர்கள்...
ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் :

தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் 'சாகுந்தலம்'  திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின்னர் அந்த தேதியில் வெளியாகாமல் பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடந்து மீண்டும் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

தேதி ஒத்திவைப்பிற்கு காரணம் :
 
இப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால் அறிவித்த தேதியில் படம் சில காரணங்களால் வெளியாகாது என்றும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்ற அதிகாரபூர்வமான தகவலை இன்று வெளியிட்டுள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்தை மொத்தமாக 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற படக்குழு திட்டமிட்டதால் தான் இந்த ஒத்திவைப்பு என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

ஒத்திவைப்பால் ரசிகர்கள் வருத்தம் :

மகாபாரதப்  புராணக் கதையின் ஒரு பகுதியான சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருந்த இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் சமந்தா ரசிகர்கள். சமீபத்தில் மயோசிட்டிஸ் பாதிப்பிலிருந்து மீண்ட சமந்தாவை சகுந்தலாவாக இப்படம் மூலம் திரையில் காண மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். இருப்பினும் விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

சமந்தா மிகவும் பிஸி : 

அது மட்டுமின்றி நடிகை சமந்தா அடுத்தடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி, ஆங்கிலப் படமான ’அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’, வெப் சீரிஸ் ’சிட்டடல்’ என அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget