Bharathi Kannamma | இப்படி ஒரு ட்விஸ்ட்டா? பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமாவால் கொந்தளித்து, கதறும் ரசிகர்கள்..
பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப தான் முடிப்பிடிங்க? இன்னும் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க என கமெண்ட்டுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கண்ணம்மா தனது கணவர் யார் என்று தெரிவிக்கும் காட்சிகளைக் காண்பதற்காக கடந்த 2 வாரங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் இந்த வாரமும் சொல்லாததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் என்றாலே ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல்னா சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு மிகப்பெரிய ரீச் ஆனது. டிஆர்பிலும் நம்பர் 1 இடத்தைத்தான் பெற்றது. சராசரி குடும்பத்தில் பிறந்த பெண், பெரிய குடும்பத்தில் அதுவும் டாக்டரை திருமணம் செய்துக்கொள்வதால் மாமியார் வெறுப்பதாகக் கதைக்களம் நகரும். அதிலும் கருப்பான பெண் கண்ணம்மா என்பதால் அவரை மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் , அவளின் நல்ல மனதைப்பார்த்து மாமியார் சௌந்தரியாவும் மனம் மாறுகிறார். ஆனால் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
இறுதியில் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் ஒரு குழந்தை மட்டும் தான் கண்ணம்மாவிடம் வளர்வதுப்போன்றும், மற்றொரு குழந்தை மாமியார் சௌந்தர்யாவிடம் வளர்கிறது. ஒருநாள் இதனைத் தெரிந்துகொண்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். எப்பொழுதாவது ஒரு நாள் தன்னை பாரதி ஏற்றுக்கொள்வார் என்ற மனநிலையில் இருந்த கண்ணம்மா, இதனால் பல முறை அசிங்கப்படுகிறார்.
இந்நிலையில் தான் தன்னுடைய பிறந்த நாள் விழாவில் லட்சுமியின் அப்பா யார் என்று சொல்லிவிடுவேன் என்று தெரிவித்தார். அப்பொழுதே ரசிகர்கள் இந்த முறையாவது சொல்லிவிடுங்களா? என கலாய்த்தனர்.
அதற்கேற்றோர் போல் தான், ரசிகர்களின் பொறுமையை மீண்டும் சோதிக்கும் வகையிலான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பிறந்தநாள் விழா தொடங்கிய நிலையில், கண்ணம்மாவின் மகள் லக்சுமி, தனது அப்பா யார்? என்று கூறுமாறு கண்ணம்மாவிடம் கேட்கிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் கண்ணம்மா, தன்னைத்தான் அப்பா என்று சொல்லிவிடுவார் என்ற பயப்படுகிறார்.
உடனே, உனக்கு உன் அப்பா யாருன்னு தெரியணும் அதானே,நானே சொல்றேன். இதோ இங்க நிக்கிறாங்களே அவங்க தான் உனக்கு எல்லாமே எனக் கூறுகிறார்.
மேலும் உனக்காக தன்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்ச உன் அம்மா, அப்பா என்றும் எல்லாமே அவங்கதான் என்று கூறுகிறார். உடனே லட்சுமி கண்ணீருடன் கண்ணம்மாவை கட்டிப்பிடிப்பது உடன் ப்ரோமோ முடிவடைகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்பதான் முடிப்பீங்க? இன்னும் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க என பலர் கமென்டுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர்.