Reshma Muralidharan : சீரியல் ஸ்டார் ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர்தான்.. அபி டெய்லர் ரேஷ்மாவின் கதை தெரியுமா?
ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்று நடத்தியிருக்கும் நிலையில், குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக ரேஷ்மா அடிக்கடி பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
ஜி தமிழில் பூவே பூச்சூடவா சீரியல் நாயகி ரேஷ்மா முரளிதரன் எடுத்துக்கொண்ட க்யூட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் கமெண்ட்டுகளைத் தெறிக்கவிடுகின்றனர்.
வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக சின்னத்திரை நாயகிகளும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஒருவர்தான் ரேஷ்மா முரளிதரன். கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனையடுத்து ஜீ தமிழின் மிகவும் பிரபலமான பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ரேஷ்மா முரளிதரன்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மையமாக வைத்து கதைக்களம் நகர்ந்த நிலையில் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களைப் பெற்றார். இந்நிலையில் தான் இச்சீரியலில் ரேஷ்மாவின் அக்காவின் கணவராக மதனுக்கும் ரேஷ்மாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் கடந்த நவம்பர் 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் நடித்ததோடு மட்டுமில்லாமல், பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜோடியாக வலம் வந்தனர். பின்னர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் அபி டெயிலர் என்ற சீரியலில் ஹீரோயினாக ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக அவரது கணவர் மதன் பாண்டியன் நடித்து வருகிறார். குறிப்பாக ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் இச்சீரியலில் மிகுந்த ஈடுபாட்டோடு ரேஷ்மா நடித்துவருகிறார். பார்ப்பதற்கு பப்லி மற்றும் கருப்பான தோற்றத்தில் காட்சியளிக்கும் ரேஷ்மா சமீபத்தில் விதவிதமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.
ரேஷ்மா முரளிதரன் 2015 ஆம் ஆண்டு ஃபேஸ் ஆஃப் சென்னை அழகிப் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களைப் பெற்றிருந்தார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியின் 2 வது ரன்னர் அப் இடத்தைப்பிடித்தார்.
இதோடு மட்டுமின்றி ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்று நடத்தியிருக்கும் நிலையில், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷ்மா அடிக்கடி பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோடு சிறந்த நடன கலைஞரான ரேஷ்மா முரளிதரன், சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார்.