கியா... கிஸ்... உற்சாகம்... புதுக்கார் வாங்கிய பிரபல சீரியல் நடிகை!
காரின் விலை 11 லட்சம் ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், தான் கார் வாங்கிய மகிழ்ச்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நந்தினி.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதனை தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்த நந்தினி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ’மைனா’ கதாபாத்திரத்தில் நடித்தார்.
மைனா கதாபாத்திரம்
இந்தக் கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அது முதல் மைனா நந்தினி என்றே அவரை ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.
முன்னதாக மைனா திருமணம் செய்துகொண்ட கார்த்திகேயன் என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த நந்தினி, சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘நாயகி’ சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மைனா - யோகேஷ் தம்பதி
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் இந்தத் தம்பதி படு ஆக்டிவாக உள்ளனர். சமூக வலைதளங்களில் தங்களது நடவடிக்கைகளை பதிவிட்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளனர்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் மைனா நந்தினியினைப் பின்தொடர்கின்றனர். இதோடு ரசிகர்களை மேலும் கவரும் விதமாக மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் நந்தினி. இந்தச் சேனலுக்கும் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ள நிலையில், சில நேரங்களில் இவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பல லட்சம் வியூவர்ஸுடன் டிரெண்டாகி வருகிறது.
புது வரவு
மேலும், பல்வேறு சேனல் ரியாலிட்டி ஷோக்களிலும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும் வெற்றிகரமான சீரியல் உலகில் உலா வருகிறார் நந்தினி. இந்நிலையில், கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் காரை தற்போது நந்தினி வாங்கியுள்ளார்.
View this post on Instagram
இதன் விலை 11 லட்சம் ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், தான் கார் வாங்கிய மகிழ்ச்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நந்தினி.
தன் கணவருக்கு முத்தமிட்டவாறும், கார் சாவியை இவர்களது குழந்தை ஏந்தியபடியும் உள்ள இந்த ஃபோட்டோக்கள் இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்