Watch Video: ''பதில் சொல்ல முடியல..'' கண்ணீருடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஜெனிபர் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவது முதல் ஏராளமான ரசிகர்களை கொண்டு டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அசத்தி வருகிறது. இந்த சீரியலில் ராதிகா ரோலில் முதலில் நடித்தவர் ஜெனிபர். பின்னர்
பல்வேறு காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகினார். அந்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்பதால் நடிக்க பிடிக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் ஜெனிபர் கர்ப்பமாக இருந்ததால்தான் சீரியலில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.
View this post on Instagram
அதுபோலவே, அவர் சீரியலில் இருந்து வெளியேறி அடுத்த சில மாதங்களில் குழந்தைக்கு தாயானார் ஜெனிபர். அதன்பின்னர் தன்னுடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் ஜெனிபர் சீரியல் பக்கம் வரவில்லை. விரைவில் அவர் மீண்டும் சீரியல் பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலில் இல்லை என்றாலும், இன்ஸ்டா மூலம் எப்போதும் ரசிகர்களுடன் இணைந்தே இருந்த ஜெனிபர். இந்நிலையில் இன்று இன்ஸ்டாவில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஜெனிபர்.
View this post on Instagram
அந்த வீடியோவில், எனது அப்பா இன்று காலமானார். அந்த துயரத்தை தாங்க முடிவில்லை. ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலர் மெசேஜ் மற்றும் அழைப்பு மூலம் விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றார். மேலும், தனது தந்தை ஒரு டான்ஸ் மாஸ்டர் எனவும், அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடலில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், பெரிய பிரச்னை இல்லை என்றாலும் அவர் காலமாகிவிட்டார் எனவும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.