சீதா கல்யாண களேபரமே... பார்த்திபனை கரம் பிடித்த சுவாரஸ்ய கதை
நடிகை சீதா இயக்குநர் பார்த்திபன் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலும் கூட இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தம்பதியாகத் தான் வாழ்கின்றனர்.
நடிகை சீதா இயக்குநர் பார்த்திபன் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலும் கூட இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தம்பதியாகத் தான் வாழ்கின்றனர்.
சீதாவும் பார்த்திபனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அந்தத் திருமணம் சினிமாவை விஞ்சிய பரபரப்பைக் கொண்டது எனக் கூறுகிறார் நடிகர் சித்ரா லக்ஷ்மணன்.
பார்த்திபன் சீதாவை காதலிக்கத் தொடங்கியது புதிய பாதை படத்தில் தான். அந்தப் படம் தான் அவருக்கு முதல் படம். ஆனால் அந்தப் படத்தில் நடிக்கும் போதே சீதா நன்கு அறியப்பட்ட நடிகை. சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் அந்தப் படம் ஆரம்பித்த சில காலத்தில் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே காதல் முற்றியது. இது சீதா வீட்டிற்கும் தெரிந்துவிட்டது. சீதாவின் தந்தை பயங்கர கெடுபிடி காட்ட ஆரம்பித்தார். இதனால் சீதா மனம் நொந்து போனார். பார்த்திபனால் சீதாவை சந்திக்கவே முடியவில்லை. சீதா சூட்டிங் ஸ்பாட்டில் காவலுக்கு ஆள் போட்டிருந்தார் அவர் தந்தை. அதுமட்டுமல்லாமல் சீதா கோயில், ஹோட்டல் என எங்கு சென்றாலும் ஆள் இருப்பார்கள். அப்போதுதான் பார்த்திபன் சீதாவை கல்யாணம் செய்ய முடிவு செய்தார். 1989 டிசம்பர் 11 திருமண நாளாக நிச்சயித்தார் பார்த்திபன்.
ஆனால் அந்தத் தகவலை சீதாவிடம் சொல்லவும் வழியில்லை. 11ம் தேதி காலை 5 மணிக்கு சீதா வீட்டிலிருந்து சூட்டிங் கிளம்புகிறார் என்று மட்டும் தெரிந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீதா வீட்டருகே ரெண்டு காரை ஆட்களுடன் பார்த்திபன் நிறுத்தி வைத்தார். அமைந்தக்கரையில் உள்ள பார்த்திபன் நண்பர் வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது சீதா வந்தடைந்தார். அப்போதுதான் பார்த்திபனுக்கு உயிரே வந்தது. சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் திருமணம் நடந்தது நிமிடத்துக்கு நிமிடம் சினிமா பரபரப்புடன் இருந்தது.
அப்படி காதலால் கசிந்துருகி சினிமா பாணியில் போராடி சீதாவை கரம்பிடித்தார் பார்த்திபன். இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். போதாதற்கு ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் யார் கண் பட்டதோ என்று கேட்கும் அளவிற்கு திடீரென இருவர் வாழ்விலும் விரிசல் ஏற்பட்டது. அது பூதாகரமாகி இருவரும் விவாகரத்து பெற்றனர். அப்போது என் மனம் வலித்தது. விதி வலியது என நினைத்தேன் என்றார்.
சீதாவின் தந்தை காட்டிய கெடுபிடி..
திருமணத்திற்குப் பின்னர் தான் சீதா வாய் திறந்து மனம் திறந்து பேசினார். என் அப்பா அம்மாவுக்கு என் மீது பாசமில்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால், நான் நடிக்க ஆரம்பித்த பின்னர் தான் எல்லாமே மாறிவிட்டது. எனக்கு வாய்ப்புகள் குவிந்தன. அப்பா தான் எல்லாம் புக் செய்வார். என் சம்பளம் கூட எனக்குத் தெரியாது. என்னை பணம் காய்க்கும் மரமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனக்கு நடிக்கவே பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தி தினம் தினம் சூட்டிங் என கொடுமை படுத்துகின்றனர் என்று சீதா பார்த்திபனுக்கு எழுதிய கடிதம் தான் திருமணத்தை விரைவாக முடிக்க பார்த்திபனைத் தூண்டியது என சித்ரா லக்ஷ்மணன் கூறினார்.
Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!