Seeman wishes Meiyazhagan : கார்த்தி படத்தை மனதார பாராட்டிய சீமான்... அறிக்கை மூலம் என்ன சொன்னார் தெரியுமா?
Seeman wishes Meiyazhagan : கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'மெய்யழகன்' படத்தின் டீசர் வெளியிட்டது முதல் படத்தின் துறைகள் அனைத்தையும் தமிழில் குறிப்பிட்டு இருந்ததை பாராட்டியுள்ளார் சீமான்.
![Seeman wishes Meiyazhagan : கார்த்தி படத்தை மனதார பாராட்டிய சீமான்... அறிக்கை மூலம் என்ன சொன்னார் தெரியுமா? Seeman wishes Meiyazhagan team for using tamil words through his twitter post Seeman wishes Meiyazhagan : கார்த்தி படத்தை மனதார பாராட்டிய சீமான்... அறிக்கை மூலம் என்ன சொன்னார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/c24461fd4d00cd1c6f106cf834aa8a171725870774431572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'மெய்யழகன்'. சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், '96' பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த வசந்தா இசையில் உருவாகியுள்ள நடிகர் கார்த்தியின் 27வது படமான 'மெய்யழகன்' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் அரவிந்த்சாமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 27ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'மெய்யழகன்' படத்தின் டீசர் வெளியானதை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில் தெரிவித்ததாவது "அன்பு தம்பி கார்த்தி மற்றும் சகோதரர் அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். படத்திற்கு தூய தமிழ் பெயர் சூட்டியதற்கும், டீசரை கிளர்வோட்டம் என மொழியாக்கம் செய்தமைக்கு என்னுடைய பாராட்டுக்கள். படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகளையும் அழகுத் தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு.
அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும்… pic.twitter.com/sPABpipCh2
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 9, 2024
இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!" என குறிப்பிட்டு 'மெய்யழகன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார் சீமான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)