Rachitha Hair Secret : எனக்கு இருக்குற மாதிரி தலைமுடி வேணுமா? சரவணன் மீனாட்சி ரச்சிதா சொன்ன சீக்ரெட் இதுதான்..
சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் என்றாலே சூட்டிங்கிற்காக பல ஊர்களுக்கு செல்ல நேரிடும். பல தண்ணீர்களைப் பயன்படுத்தக்கூடும். இதனால் அவர்களின் முகம் மற்றும் தலைமுடியைப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்படும்.
ஷூட்டிங்குக்காக பல ஊர்களுக்குச் சென்றாலும், செம்பருத்தி, கறிவேப்பிலை, வெந்தயம் எல்லாம் சேர்த்து வீட்ல அம்மா செய்துகொடுத்த எண்ணெய் மட்டும் யூஸ் பண்றதுனால முடி நல்லா வளர்கிறது என்கிறார் சின்னத்திரை நடிகை ரச்சிதா.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் தங்க மீனாட்சியாக வலம் வந்தவர் தான் ரச்சிதா. கிராமத்துக் கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் வாயிலாக மக்கள் அனைவரின் நெஞ்சில் இடம் பெற்றுள்ளார் ரச்சிதா. இதனையடுத்து ஜி தமிழில் நாச்சியார் மற்றும் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் களம் இறங்கி இவருக்கு ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது. இந்நிலையில் தற்போது சொல்ல மறந்த கதை மூலம் புதிய அவதாரத்தில் இறங்கியுள்ளார் ரச்சிதா. தைரியமான, நேர்மையான மற்றும் அன்பானவராக நடிக்கிறார் ரச்சிதா.
பொதுவாக சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் என்றாலே சூட்டிங்கிற்காக பல ஊர்களுக்கு செல்ல நேரிடும் மற்றும் வெவ்வேறு தண்ணீரை பயன்படுத்தக்கூடும். இதனால் அவர்களின் முகம் மற்றும் தலைமுடியைப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்படும். இப்படி ஒரு பிரச்சனையை தான் சந்தித்தாகவும், இத்துறையில் இருக்கிற வரைக்கும் முடியைப் பராமரிப்பது கஷ்டமான விஷயம் என்றாலும் இதனை நான் சுலபமாக கையாள்கிறேன் என்கிறார் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ரச்சிதா, சூட்டிங்கின் போது நம்ம பயன்படுத்தற ஹீட்டுக்கே பாதி முடி போய்விடும் எனவும், அதுவும் எனக்கு உச்சந்தலையில் முடி சுத்தமாக போய்விட்டது. இதனையடுத்து முடி நீளமாக காட்டுவதற்காக எக்ஸ்டன்ஷன் வச்சதுனால என்னுடைய முடி அனைத்தும் கொட்டிவிட்டது.
இதனையடுத்து தான் எனது அம்மா என்னுடைய முடியைப் பராமரிக்க செம்பருத்தி, கறிவேப்பிலை, வெந்தயம் எல்லாம் சேர்த்து வீட்டுல எண்ணெய் செஞ்சுக்கொடுத்தாங்க. இதனைப்பயன்படுத்தினால தான் முடி எனக்கு நல்லா வளர ஆரம்பித்தது என்று தெரிவித்துள்ளார்.
இதோடு நாம் எப்போதுமே எண்ணெய் தேய்ச்சி குளிக்கக்கூடாது எனவும், எப்போதாவது தான் எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும் நிறைய பேரு சொன்னதையும் நான் கேட்டு டிரை பண்ணினேன். அதுவும் எனக்கு நல்ல ரிசல்ட் கொடுத்தது. இதற்கு முடிக்கு கற்றாழை, ஜெல் பயன்படுத்துவதாகவும், எப்போதாவது முட்டை வெள்ளைக்கருவையும் போடுவேன் என பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மேலும் ஊறவைத்த பச்சை பயறு, வெந்தயம் இரண்டையும் அரைத்து பேஸ்டை கூந்தலின் தடவினால் முடி நல்ல அடர்த்தியாகும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் ரச்சிதா. இதோடு வழக்கமாக ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்யும்போது ஹீட் புரொட்டக்ஷன் போட்டுத்தான் செய்வேன் என்றும் இதனால் தான் என்னுடைய முடி நன்றாக வளர்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹூட்டிங்காக பெங்களூர், ஹைதரபாத், சென்னை, என எப்போவுமே டிராவல்லதான் இருப்பேன். அதனால தண்ணீர் மாறிட்டே இருக்கும். ஆனாலும் அம்மா செய்துகொடுத்த எண்ணெய் பயன்படுத்துறதால முடி கொட்டுறது குறைஞ்சிருக்கு எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.