samantha | Oo Antava| ‛கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடினமான வேலை’ - சமந்தா புது விளக்கம்!
இந்நிலையில் பாடல் குறித்தான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா ‘தி ரைஸ்’ . இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜூனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக படத்தின் “ oo antava mama ' பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சமந்தா படு கிளாமராக நடனமாடியிருக்கிறார் என்பதாலும் பாடல் அதிகம் கவனிக்கப்பட்டது. ஆண்களை வக்கிரம் உள்ளவர்களாக சித்தரிக்கும் பாடலை நீக்காவிட்டால் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வோம் என்றது ஆந்திர ஆண்கள் அமைப்பு. இந்நிலையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாடலின் வரிகள் உண்மைதானே..உண்மையைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்றார் சிரித்தப்படி. என்னதான் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இன்று சமந்தாவின் நடனம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் பாடல் குறித்தான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் “ நான் நன்றாக நடித்தேன்....மோசமாகவும் பிளே செய்தேன்.....நான் சீரியஸாக இருந்தேன், நான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தேன்.. நான் எடுக்கும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் ... ஆனால் கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடினமான வேலை. ..அப்பா
#ooantavaooooantava அன்புக்கு நன்றி” என தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது புஷ்பா படத்தின் ooo anthava பாடல் யூடியூப் பக்கத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.