Samantha Ruth Prabhu : ஜூனியர் என்டிஆர் நடிக்க படத்தில் சமந்தா மறுத்தாரா? காரணம் இதுதானா?
சமந்தா தற்போது பான் இந்தியா நடிகையாக விளங்கி வருவதால் அனைத்து தயாரிப்பாளர்களின் பார்வையும் சமந்தாவின் மேல் திரும்பி உள்ளது.இதைத்தொடர்ந்து சமந்தா ஜூனியர் என் டி ஆர் உடன் நடிக்கவிருந்த திரைப்படத்திலிருந்து தற்போது விலகி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு தொடக்கக்கால தமிழ் சினிமா உடனடியாக கைகொடுக்கவில்லை. கல்லூரி காலத்திலேயே மாடலிங், விளம்பரங்களில் நடிப்பு என திரைவாழ்க்கைக்கான அடித்தளமிட்டாலும் தமிழ்த்திரையுலகில் கால்பதிக்க சில எடுத்தது. விளம்பரங்களில் சமந்தாவின் துடிப்பான நடிப்பைக் கண்ட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அவரை மாஸ்கோவின் காவேரி படத்தில் ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தாவின் முதல் படம்.
ஆனால் திரையில் சமந்தா தோன்றியது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். தமிழில் சின்ன வேடம்தான் என்றாலும் தெலுங்கில் நாயகியாக நடித்தார். அந்தப்படமே அவரின் காதல் வாழ்க்கைக்கும் அடித்தளமிட்டது. அதற்கு பின் தமிழைவிடவும் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார் சமந்தா. பிருந்தாவனம், மகேஷ்பாபுவின் தூக்குடு போன்ற படங்கள் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தன. இந்தப்படங்கள் சமந்தா ஒரு தவிர்க்க முடியாத நாயகி என்றே தெலுங்கில் பதியவைத்தன. அதேவேளையில் தமிழில் பெரிய ரீச் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார். சரியான வாய்ப்பாக அவருக்கு கிடைத்தது நான் ஈ திரைப்படம்.
திரைப்படங்கள் தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி, மலையாளம் என்ற பூர்வீகத்தை உடைத்து தமிழ் பேசும் நம்ம ஊர் பெண் என்ற தனித்துவத்தால் எளிதில் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருக்கிறார்.
க்யூட் க்யூட் ரியாக்ஷன் மூலம் நான் ஈ சமந்தா தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டார்.
இந்திய சினிமாவில் சமந்தா தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் கவனம் சமந்தாவின் மேல் திரும்பி உள்ளது அனைவரும் சமந்தாவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் இதை தொடர்ந்து. கொரட்டாலா சிவா இயக்கவிருக்கும் ஜூனியர் என்டிஆர் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாக திரையுலகில் பலத்த சலசலப்பு நிலவி வருகிறது.இருப்பினும், இது தொடர்பான பிரச்சனைகளால் சமந்தா அப்படத்தை கைவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் சமந்தாவிற்கு இரண்டு கோடி சம்பளம் தருவதாக பேசி இருந்தனர் ஆனால் சமந்தா நான்கு கோடி கேட்டதாக தகவல் வழியாக உள்ளது அது மட்டும் அல்லாமல் சமந்தாவின் கால்ஷீட்டுகள் கிடைக்க மிகவும் கடினமாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த திரைப்படத்தில் இருந்து சமந்தா விலகியது அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனென்றால் இந்திய அளவில் பிரபலமானவர் ஜூனியர் என்டிஆர் அவருடன் இணைகிறார் சமந்தா என்ற செய்தி கேட்டவுடன் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர் தற்போது இவர்கள் இருவரின் ரசிகர்களுமே ஏமாற்றத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்