Salaar Trailer: மரண மாஸ் காட்டும் பிரபாஸ் - பிரித்விராஜ்: துவம்சம் செய்ய வரும் சலார்: 2வது ட்ரெய்லர் ரிலீஸ்
Salaar Trailer: கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.
அடுத்தவாராம் அதாவது கிருஸ்துமஸ்க்கு முன்னதாக வெளியாகவுள்ள படங்களில் மிகவும் முக்கியமான மற்றும் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் என்றால் அது பிரபாஸ் மற்றும் ப்ரித்விராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் முதல் பாகமும், ஏற்கனவே இந்த ஆண்டில் இரண்டு முறை ஆயிரம் கோடி வசூல் செய்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் டங்கி படம் வெளியாவுள்ளது.
இதில் சலார் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான முதல் ட்ரெய்லர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தென் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் சலார் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது அடுத்த படைப்பான சலார் படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.