மேலும் அறிய

Varalakshmi in Sabari Movie: சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் வரலக்ஷ்மி... கொடைக்கானலில் முடித்த "சபரி" ஷூட்டிங்

அனில் காட்ஸ் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் "சபரி"(Sabari) திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் மிகவும் மும்மரமாக நடைபெற்று தற்போது முடிவடைந்தது

பல மொழி படங்களில் பல விதமான சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்( Varalakshmi) தற்போது "சபரி" (Sabari) படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்துள்ளது. அதை வெற்றிகரமாக முடித்துள்ளனர் படக்குழுவினர். 

Varalakshmi in Sabari Movie: சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் வரலக்ஷ்மி... கொடைக்கானலில் முடித்த

கொடைக்கானலில் நடந்து முடிந்த படப்பிடிப்பு:

அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி தன்னை மிகவும் பிஸியாக வைத்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி. தற்போது இயக்குனர் அனில் காட்ஸ் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் "சபரி" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலக்ஷ்மி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் மிகவும் மும்மரமாக நடைபெற்றது. இதில் படத்தின் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களின் காட்சிகளை படமாக்கினர் என தெரிவித்துள்ளார் சபரி படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கோண்ட்லா. 

அடுத்து எங்க ஷூட்டிங்:

ஒரு பாடல், முக்கியமான காட்சிகள் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கொடைக்கானலில் மிகவும் அழகான 14 பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சண்டை காட்சிகளை ஃபைட் மாஸ்டர்கள் நந்து - நூர் முடித்தனர். ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சுசித்ரா சந்திர போஸ் நடனம் அமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் அடுத்த படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விரைவில் தொடங்கும். 

பாடல்கள் ரெடி :

சபரி படத்தின் அனைத்து பாடல்களும் ரெகார்ட் செய்யப்பட்டுவிட்டது. சித்ரா, அனுராக் குல்கர்னி, ரம்யா பெஹாரா மற்றும் அம்ரிதா சுரேஷ் ஆகியோர் இந்த படத்தின் பாடல்களை பாடியுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க் மற்றும் மைம் கோபி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

திரைவாழ்வில் ஒரு மைல்கல்:

நடிகை வரலக்ஷ்மி இதுவரையில் ஏற்காத ஒரு வித்தியாசமான, சவாலான, உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு உளவியல் சார்ந்த திரில்லர் திரைப்படம். ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்கு வழங்குவதற்காக கடுமையாக உழைத்துள்ளது. இப்படம் நிச்சயமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Embed widget