Robo Shankar: ரோபோ சங்கருக்கு என்னாச்சு? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை!
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கருக்கு உடல் நலக்குறைவு:
தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மிமிக்கிரி கலைஞராக இருந்து அதன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகாமானவர் ரோபோ சங்கர். தனது நகைச்சுவை திறமையால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகராக உருவானார். நடிகர் விஜயுடன் புலி திரைப்படத்திலும், அஜித்துடன் விஸ்வாசம், தனுஷ் நடிப்பில் வெளியான மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதனைடையே ஒருசில திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்தும் வருகிறார். இச்சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பதிக்கப்பட்ட இவர் பின்னர் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். இவரது உடலும் மெலிந்து காணப்பட்டது.
தீவிர சிகிச்சை:
இந்த நிலையில் தான் ரோபோ சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது , படப்பிடிப்பின்போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று காலை சாதரண பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை சாதரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் ரோபோ சங்கர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் மீண்டும் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.






















