Kantara: காந்தாரா படத்துக்காக ரிஷப் ஷெட்டி செய்த சிறப்பான சம்பவம்...பாராட்டும் ரசிகர்கள்
தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. காந்தாரா படத்தின் தாக்கம் காரணமாக கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்தது.
காந்தாரா படத்துக்காக அப்படத்தின் ரிஷப் ஷெட்டி செய்த சம்பவம் ஒன்று ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
View this post on Instagram
இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
Sardaar movie chudandi please🙏🙏
— popeye (@popeye_kid_) October 29, 2022
Water heat cheskuni tagandi!!!it contains chemicals
@rajinikanth ##Sardaar #Rajinikanth #Kantara #RishabhShetty pic.twitter.com/MN33OVyGwi
குறிப்பாக தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. காந்தாரா படத்தின் தாக்கம் காரணமாக கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்தது. பல மொழி நடிகர்களும் ரிஷப் ஷெட்டியை பாராட்டிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ரிஷப் ஷெட்டியை பாராட்டினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் கிட்டதட்ட நான் 50-60 கிலோ எடையை சுமந்து தெய்வ நர்த்தகர் சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கப்பட்ட போது ரிஷப் ஷெட்டி கிட்டதட்ட ஒரு மாதம் அசைவம் சாப்பிடாமல் இருந்துள்ளார். அதேபோல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது தனக்கு தீக்காயம் ஏற்பட்டது உண்மை தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெய்வ நர்த்தகர் அலங்காரம் போட்ட பிறகு, தேங்காய்த் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிட மாட்டேன். அந்த காட்சியை செய்வதற்கு முன்னும் பின்னும் எனக்கு பிரசாதம் கொடுப்பார்கள் எனவும் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.