அதிகரிக்கும் ஓ.டி.டி. பார்வையாளர்கள் - நீயா? நானா? - பெண்களுக்கு டஃப் கொடுக்கும் ஆண்கள்!
ஓடிடி தளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ளனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஓடிடி தளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ளனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒடிடி தளத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா. கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது.
அதுமட்டுமில்லாமல் தொலைபேசியில் இண்டெர்நெட்டும் வீணாய் போய்கொண்டிருக்கிறது என்ற ஏக்கம் பலருக்கும் இருந்திருக்கலாம். அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது கொரோனா ஊரடங்கு. அனைவரும் ஓடிடியை பயன்படுத்த தொடங்கினர். எந்நேரமும் மொபைலும் படமுமாக இருந்தனர் என்றால் அது மிகையல்ல.
அந்த அளவிற்கு ஓடிடியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
படங்களை தியேட்டரில் வெளிவிட முடியாத சூழ்நிலையில் ஓடிடி தளங்களே தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் சிறு சிறு படங்களும் இதன் மூலம் வருவாயை ஈட்டின. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னரும் ஓடிடியின் மோகம் பெரும்பாலானோருக்கு முடிவுக்கு வரவில்லை. அதனால் பெரும்பாலான தயாரிப்பாளர்களும் ஒடிடியின் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.
அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டார் தான் அனைவரும் அறிந்த ஓடிடி தளங்கள். ஆனால் இதையும் தாண்டி சோனி லைவ், ஜி ஃபை உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. ஓடிடி தளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஓ.டி.டி தளத்தின் வாயிலாக, திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை, 35 கோடியிலிருந்து 50 கோடி வரை அதிகரிக்கும் என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், ஆண் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பெண்களை விட இருமடங்கு அதிகரித்துள்ளதும் ‘பெட்வே இன்சைடர்’ எனும் நிறுவனத்தின் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில், “நாட்டில், 15 வயதிலிருந்து 30 வயது வரையிலான இளவயதினரே ஓ.டி.டி தளங்களை அதிகம் பார்க்கிறார்கள். பெண்களை பொறுத்தவரை 25 – 35 வயது பிரிவினர் அதிகம் பார்வையிடுகிறார்கள். இருப்பினும் ஆண்களை விட பெண்கள் 50 சதவீதம் குறைவாகவே இருக்கின்றனர். ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4.3 கோடியாக உள்ளது. இதை அடுத்து, அமேசான் பிரைம் 1.7 கோடி சந்தாதாரர்களையும், நெட்பிளிக்ஸ் 50 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருக்கின்றன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?