Cinema Headlines: சாதனை படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா.. வருத்தப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்- சினிமா தலைப்புச் செய்திகள்!
Cinema Headlines :இன்றைய சினிமா தலைப்புச் செய்திகள்
Powerstar Srinivasan: ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. வருத்தப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் - என்ன ஆச்சு?
பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, “நான் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறேன். ஷூட்டிங் சென்று தான் கொண்டிருக்கிறது. இன்னும் ரிலீஸாகவில்லை. ரிலீஸ் செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினை சென்றுக் கொண்டிருப்பதால் படம் நின்று போய் விடுகிறது. அதனால் என் படம் ரிலீஸாகாமல் உள்ளது. அதனால் தான் என் படங்களை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. மேலும் நான் எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். என்னை பற்றி ஏராளமான தவறான தகவல்கள் வருகின்றது. நான் இறந்து விட்டதாக கூட சொன்னார்கள். அப்போது நான் மருத்துவமனையில் தான் இருந்தேன். இதுதொடர்பாக நான் பல இடங்களில் விளக்கம் கொடுத்து விட்டேன் என்றார். மேலும் படிக்க
ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது - நடிகர் ரஞ்சித்
கோவை காந்திபுரம் பகுதியில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ சிறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,ஒரு விஜய் அல்ல ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது. இதுவரை வாக்குறுதி கொடுத்தவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை. மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தவறான வாக்குறுதிகளை கொடுத்து விட்டோம் என்று நினைக்கவில்லை. உடல்நிலை மட்டும் ஒத்துப் போயிருந்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருந்திருப்பார் என்றார்.மேலும் படிக்க
14 Years of Samantha: முதல்முறை பார்த்த நியாபகம்.. சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு!
இயக்குநர் கௌதம் மேனனின் சிறந்த காதல் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தான் சமந்தா முதல்முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் இப்படம் யே மாயா செசவே என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் சமந்தா தமிழில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கேரக்டரில் நடித்திருந்தார். அதேசமயம் தமிழில் சிம்பு எடுக்கும் படத்தின் ஹீரோயினாக சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் சமந்தாவுக்கு பாராட்டுகளை குவித்தது. இதனைத் தொடர்ந்து அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் தான் முழுநேர ஹீரோயினாக தமிழில் சமந்தா அறிமுகம் நடந்தது. இதன்பின்னர் மாஸ்கோவின் காவிரி படத்தில் இடம்பெற்ற “கோரே கோரே” பாடம் அவருக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. ஆனால் இப்பாடலை பார்த்தால் இது சமந்தாவா என கேட்க கூடிய அளவுக்கு வித்தியாசமாக இருப்பார். மேலும் படிக்க
Vinnaithaandi Varuvaayaa: “அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் ” - ரீ-ரிலீஸில் சாதனைப் படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!
விண்ணைத்தாண்டி வருவாயா படம் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது திரையரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.மேலும் படிக்க
விழுப்புரத்தில் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் ராகவா லான்ரஸ்... குவிந்த ரசிகர்கள்
விழுப்புரத்தில் நடிகர் ராகவா லான்ரஸ் நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் ராகவா லான்ரஸூக்கு பறை மேளம் இசைத்து நடனமாடியும், மலர்களை தூவியும் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து விழா மேடை ஏறிய நடிகர் ராகவா லான்ரஸ், ஒவ்வொரு ரசிகரையும் அழைத்து தன்னுடன் நிற்க வைத்து தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் படிக்க