கன்னட நடிகருடன் நிச்சயம்வரை சென்று நின்றுபோன ராஷ்மிகா மந்தனாவின் திருமணம்...என்ன காரணம் தெரியுமா
கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் இருவரும் பிரிந்தனர்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவர்கொண்டா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் இருவரும் பிரிந்தது குறிப்பிடத் தக்கது.
ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் ஷெட்டி பிரிந்தது ஏன்
2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இணைந்து நடித்தனர். இப்படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் பிரம்மாண்டமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரது திருமணத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ராஷ்மிகா மந்தனா மற்றும் ரக்ஷித் ஷெட்டி பிரிந்தனர். கருத்து வேறுபாடு காரணமாகவும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
விஜய் தேவர்கொண்டாவுடன் காதல்
தனது திருமணத்தை நிறுத்திய அதே ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவரவே நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. முதலில் இந்த தகவல்களை இருவரும் மறுத்தாலும் பல்வேறு நிகழ்ச்சிகளிள் இருவரும் இணைந்து காணப்பட்டாரகள். ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்வது , குடும்ப விழாக்களில் பங்கேற்பது என காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்து வந்தார்கள்.
பிப்ரவரியில் திருமணம்
இப்படியான நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சார்பில் உறுதிபடுத்தியுள்ளார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியில் தம்மா படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.





















