Reel Real Serial Couples | ரியல் லைப்பில் ஜோடி சேர்ந்த சீரியல் ஜோடிகள் : உங்க பேவரைட் எந்த ஜோடி?
ரீல் லைப் மட்டுமல்லாமல் ரியல் லைப்பிலும் ஜோடியாக மாறிய சின்னத்திரை நடிகர்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் வெள்ளித்திரையை விட, சின்னத்திரைக்குதான் வரவேற்பு அதிகமாக உள்ளது. அதற்கேற்றார் போல், சின்னத்திரை உருவாக்கப்படும் விதமும், வெள்ளித்திரை போல பெரிதாகிக் கொண்டே போகிறது.
சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நீண்ட காலம் இணைந்து பழகுவதால் அங்கு ஒருவரை யொருவர் பற்றி தெரிந்து கொள்வது மிக எளிதானதாக மாறி விடுகிறது. இந்த புரிதல் நாளடைவில் காதலாக மாறி இறுதியில் திருமணத்திலும் முடிந்து விடுகிறது. அப்படி தமிழ் சீரியல்களில் ஒன்றாக நடித்து, திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆர்யன் - ஷபானா
View this post on Instagram
கேரளாவைச் சேர்ந்த ஷபானா செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளனமான ரசிகர் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் இவரும், அந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த கார்த்திக்ராஜூம் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர்.
இதனையடுத்து, ஷபானாவும் பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து இருவரும் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவர்களுக்கிடையேயான காதல் உறுதியானது. அந்தக் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
சஞ்சீவ் - ஆல்யா மானசா
View this post on Instagram
மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆல்யா, அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்தார். இந்த சீரியல் மூலம் ஆல்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இதில் அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்தார். இந்த சீரியல் மூலம் இருவருக்கும் காதல் உருவாக, தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா
விஜய் டிவியின் ஆல் டைம் பேவரைட் ஜோடி என்றால் அது மிர்ச்சி செந்திலும் – ஸ்ரீஜாவும் தான். சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்த இவர்கள் இடையிலும் காதல் முளைத்தது. அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
View this post on Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடரில் சரவணவாகவும், மீனாட்சியாகவும் நடித்தவர்கள் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா. இவர்களின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பினர். இவர்களின் வாழ்க்கையிலும் அழகான காதல் மலர்ந்து, இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. அதனைத்தொடர்ந்து அவர் பூவே பூச்சூட வா தொடரில் நடித்தார்.அந்த தொடரில் அவரின் அக்கா கணவராக மதன் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்தும் பல சீரியல்களில் நடித்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
View this post on Instagram