Ravi Mohan: மாற்றி பேசும் ரவி மோகன்; அறிக்கையில் இதை நோட் பண்ணுனீங்களா? ஆர்த்திக்கு கூடும் ஆதரவு!
Ravi Mohan: ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே கெனிஷா வந்ததால், நான்கு சுவற்றுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை மீடியா வரை வந்துள்ள நிலையில், ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை பற்றி பார்ப்போம்.

திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு விவாகரத்து என்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஒரு சில பிரபலங்கள் விவாகரத்து குறித்து அறிவித்தால், அதனை எளிதில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. அப்படி ஒரு ஜோடி தான் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் ஜோடி.
கல்லூரி காலத்தில் இருந்தே ஆர்த்தியை காதலித்து வந்த ரவி, கடந்த 2009-ஆம் ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் - அயான் என்கிற இரு மகன்களும் உள்ளனர். 14 வருடம் திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரவியே சில பேட்டிகளில் இன்முகத்தோடு கூறிய நிலையில்... கடந்த ஆண்டு திடீர் என விவாகரத்து குறித்து அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
எப்படியும் இவர்கள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக வாழ்க்கையில் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.... கெனிஷா என்கிற பாடகி ரவி மோகன் வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்துள்ளதால் இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. திருமண நிகழ்சியில் ரவி - கெனிஷாவுடன் வந்து சென்றதில் இருந்தே, ஆர்த்தி அறிக்கை மற்றும் சில அழுத்தமான பதிவுகளை போட்டு வரும் நிலையில், தற்போது ரவி மோகனும் தன்னுடைய பங்கிற்கு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ள விஷயம் பற்றியும், இந்த அறிக்கையால் ஆர்த்திக்கு கூடியுள்ள ஆதரவு பற்றியும் பார்ப்போம்.
இந்த அறிக்கையின் துவக்கத்திலேயே... இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். என கூறி இருக்கிறார் ரவி. அதே போல் ஆர்த்தி, கடந்த கால திருமண வாழ்க்கையை சொல்லி காட்டி, மக்கள் மத்தியில் மலிவான அனுதாபம் தேடுவதாகவும் அதை என்னால் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். மேலும், மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். "ரவியின் இந்த கருத்துக்கு, நெட்டிசன்கள் சிலர் இது மனைவியை குற்றம் சொல்லி உங்களை நியாயப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி வருகிறார்கள்.
அதே போல் மனைவி மட்டுமே தன்னுடைய வாழ்க்கைக்கு வேண்டாம் என கூறியுள்ள ரவி மோகன், மகன்களை புறக்கணிக்கவில்லை என்றும், மகன்களை பயன்படுத்தி தன்னிடம் ஆதாயம் தேட ஆர்த்தி குடும்பம் முயற்சிப்பதாக கூறியுள்ளது தான் அதிர்ச்சியின் உச்சம். "இதை வரியை குறிப்பிட்டு சிலர் ரவியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஜமீன் வீட்டு வாரிசாக உள்ள ஆர்த்தியின் குடும்பம் செல்வ செழிப்பில் குறைந்தவர்கள் இல்லை. அவரின் அம்மா ரவிக்கே சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாராக உள்ளார். எனவே அவர்கள் ஏன் உங்கள் பணத்திற்கு ஆசை பட போகிறார்கள் என்பது தான் அந்த கேள்வி".

மேலும் உருகி உருகி காதலித்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆர்த்தி... ரவியை இத்தனை வருடங்கள் ஒரு கணவராக மதிக்கவே இல்லை என அவர் கூறி உள்ள கருத்தும் சில விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. ரவியின் அறிக்கையில், "எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகிறார் ஆர்த்தி , 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் அனுபவித்து வந்தனர் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சிலர், ஆர்த்தி உங்களை பார்க்க பல முறை முயற்சி செய்தும் அதை நீங்கள் தவிர்த்து விட்டதாக கூறியபோது எந்த பதிலும், சொல்லாமல் மகன்களை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறுவது நியாமா என்றும்? 5 வருடங்கள் ஆர்த்தி குடும்பம் உங்கள் பணத்தை அனுபவித்தாலும்... அதற்க்கு முன் அனுபவித்தது உங்கள் குடும்பம் தானே என்றும் அவரின் கேள்வி மூலம் அவருக்கே பதில் கேள்வி தொடுத்து வருகிறார்கள்.

இறுதியாக விவாகரத்து முடிவால் முன்பு இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் ... என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய வீட்டை விட்டு எதுவுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா. அவர் என் வாழ்க்கையின் அழகான துணை. வாழ்க்கையில் நான் சந்தித்த சட்ட ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் துணை நின்றார். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக மட்டும் இல்லாமல் தோழியாகவும் இருந்து எனக்கு உதவினார்” என ரவி கூறி இருந்தாலும்... கெனிஷா தன்னுடைய துணை என்று கூறியதன் மூலம் காதலையும் கன்ஃபாம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















