மேலும் அறிய

Japan Dubbing Begins : கர்மானா என்னனு தெரியுமா டா... கார்த்தியின் ஜப்பான் பட டப்பிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங்க் வேலைகள் தொடங்கியுள்ளன

கார்த்தி

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆக்‌ஷன் நடிகராக அதே நேரத்தில் காமெடி , ரொமான்ஸ், நகைச்சுவை என எல்லா வகைகளில் ரசிகர்களை கவரும் வகையில்  நடித்து வரும் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி இதுவா இவரது  நடிக்கும் முதல் படம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில்  நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் , நான் மகான் அல்ல  , பையா போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு நடிகராக மாறினார். மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று படம் கார்த்தியை முழுவதும் மாஸான ஒரு நடிகராக காட்டியது என்றால் மனிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவன் கதாபாத்திரம் கார்த்தியிக் முழு நடிப்பாற்றலையும் ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடித்து வரும் படம் ஜப்பான்.

ஜப்பான்

குக்கூ, ஜோக்கர் , ஜிப்ஸி உள்ளிட்டப் படங்களை இயக்கிய  இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் படம் ஜப்பான். கார்த்தி, இயக்குநர் விஜய் மில்டன், அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சில மாதங்கள் முன்பு ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜப்பான் என்கிற கதாபாத்திரத்தில் கார்த்தியின் லுக் ஒரே நேரத்தில் காமெடியாகவும் ஸ்டைலாகவும் இருப்பது ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் கதை எப்படியானதாக இருக்கும் என்கிற ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படத்தின் டப்பிங்க் வேலைகள் தொடங்கி இருக்கின்றன.  தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார்  நடிகர் கார்த்தி. இதனை தெரிவிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கர்மானா என்னானு தெரியுமா

இந்த வீடியோவில் ’கர்மானா என்னானு தெரியுமா’ என்று கார்த்தி பல மாடியூலேஷனில் பேச அது சரியாக இல்லை என்று இயக்குநர் பேசாமல் தீபாவளிக்குப் பிறகு டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே கடுப்பாகும் கார்த்தி ஜப்பான் படத்தின் கெட் அப்பில் வந்து சரியாக வசனம் பேசுகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜப்பான் படம் வெளியாக இருக்கிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Embed widget