Rajinikanth: “போகாத ஹாஸ்பிட்டலே இல்லை..மருத்துவ உதவியால் வாழ்றேன்” - ரஜினிகாந்த் பேச்சு!
நான் ஒரு கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்தால் அதில் ரஜினிகாந்த் பார்ட்னர், ஷேர் இருக்கு, பினாமி பெயரில் வைத்திருக்கிறார் என சொல்லி விடுகிறார்கள்.
மருத்துவத்துறையின் கண்டிபிடிப்புகளால் தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன் என நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறது இல்லை. அது உண்மை தான். ஏன் என கேட்டால், நான் ஒரு கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்தால் அதில் ரஜினிகாந்த் பார்ட்னர், ஷேர் இருக்கு, பினாமி பெயரில் வைத்திருக்கிறார் என சொல்லி விடுகிறார்கள்.
அதனால் ரொம்ப நாளாக நான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. எனக்கு முன்னாள் பேசியவர், ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள், மருத்துவமனை பற்றி நன்கு தெரியும் என சொன்னார்கள். அது 100 சதவிகிதம் உண்மை. என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்பல்லோ, ராமசந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை சென்று கொண்டிருக்கிறது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அவர்களுடைய உதவியால், மருத்துவத்துறையின் கண்டிபிடிப்புகளால் தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்.
மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் நோயாளிகள், பார்வையாளர்கள் என இருதரப்பினர் தான் வந்து செல்வார்கள். அந்த வகையில் நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவனையில் மிகவும் ஆபத்தான முறையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய மனைவி மருத்துவரிடம் பேசியதும், அவர்களே வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்து உடனடியான ஆம்புலன்ஸ்க்கு அழைத்து சென்றார்கள்.
அடுத்த சில மணி நேரத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னார்கள். எனக்கு மருத்துவர் சேகர் தான் இதை செய்யப்போகிறார் என சொல்லவும், என்னோட பேமிலி டாக்டரும் அவரைப் பற்றி சொல்லவும் நம்பிக்கை வந்தது. 99 சதவிகிதம் கியாரண்டி தருகிறோம் என சொன்னார்கள். எனக்கு அந்த 1 சதவிகிதம் தான் ஒருமாதிரி எண்ணங்களில் சென்று கொண்டே இருந்தது. கிட்டதட்ட 6 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு ஆபரேஷன் சக்ஸஸ் என சொன்னார்கள். அதன்பிறகு நான் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் முகத்தில் ஒரு பாசிட்டிவிட்டியை பார்த்தேன்” என அந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சினிமாவில் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் 171வது படத்தில் நடிக்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Gautham Menon: "மணிரத்னம் ஆஃபிஸ் முன்னாடி 2 வருஷம் வெயிட் பண்ணேன்" மனம் திறந்த கௌதம் மேனன்!