Watch Video : வேட்டையன் வெற்றிக் கொண்டாட்டம்..தன் கையால் பிரியாணி பரிமாறிய ரித்திகா சிங்
வேட்டையன் பட வெற்றிக்கொண்டாட்டத்தில் நடிகை ரித்திகா சிங் அனைவருக்கும் தனது கையால் பிரியாணி பரிமாறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
வேட்டையன்
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 திரையரங்கில் வெளியாகியது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
போலி என்கவுண்டர்களுக்கு பின் இருக்கும் அரசியலை மிக விரிவாக இப்படத்தை பேசியுள்ளார் இயக்குநர் ஞானவேல். அதே நேரம் ரசிகர்களை திருபதி படுத்தும் வகையிலும் படம் கமர்ஷியல் அம்சங்களையும் வைத்துள்ளது. ரஜினி மாதிரியான ஒரு பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள ஒரு கதையை பேசியிருப்பதற்காக இயக்குநர் ஞானவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஜினி மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ்
வேட்டையன் படம் முதல் நான்கு நாட்களுல் உலகளவில் ரூ 240 கோடி வசூலித்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக இரண்டாம் வார வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை நீடித்து வருகிறது. இரண்டாம் வாரம் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
பிரியாணி பரிமாறிய ரித்திகா சிங்
வேட்டையன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நடிகை ரித்திகா சிங் தனது கையால் அனைவருக்கும் பிரியாணி பரிமாறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வேட்டையன் படத்தின் இரண்டாம் வார வசூல் நிலவரம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
#Vettaiyan success meet lunch arranged by production @LycaProductions great gesture by @ritika_offl and @tjgnan serving to all ❤️❤️❤️❤️❤️❤️❤️#VettaiyanBlockbuster | #BLOCKBUSTERVettaiyan | #VettaiyanReview | #VettaiyanReviews | #Rajinikanth | #SuperstarRajinikanth | #Superstar… pic.twitter.com/5UlGIW3Gtl
— Suresh Balaji (@surbalu) October 20, 2024