மேலும் அறிய
Advertisement
Rajinikanth: சூப்பர் ஸ்டாருக்கு கதை எழுதிய தனுஷ்: ரஜினி சொன்னது இதுதான்: எந்தப் படம் தெரியுமா?
Rajinikanth:“ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆக்ஷன் சொல்வது ஒரு மாதிரியாக இருந்தது. தனுஷ் கூட எனக்காக ஒரு நல்ல கதை வைத்திருந்தார்" - ரஜினிகாந்த்.
Rajinikanth: தனுஷ் தனக்காக ஒரு கதை எழுதி இருந்தார் என்றும், ஆனால் அதில் தான் நடிக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. தனுஷ் நடித்த 3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் தான் ‘லால் சலாம்’. படத்தின் அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லைகா நிறுவனம் தயாரித்த லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லால் சலாம் படம் நாளை மறுநாள் திரைக்கு வரும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது. அதில், “ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆக்ஷன் சொல்வது ஒரு மாதிரியாக இருந்தது. தனுஷ் கூட எனக்காக ஒரு நல்ல கதை வைத்திருந்தார். அந்தப் படத்தை நான் பண்ணவில்லை. அதை தனுஷ் புரிந்துக் கொண்டார்” எனப் பேசியுள்ளார்.
ரஜினிக்காக தனுஷ் எழுதிய ஸ்கிரிப்ட் பவர் பாண்டி என்று கூறப்படுகிறது. ரேவதி, ராஜ்கிரண் மற்றும் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த பவர் பாண்டி படம் வரவேற்பைப் பெற்றது. இளம் வயது மற்றும் முதுமை காதலை கூறும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்க தனுஷ் முயன்றதாகவும், ஆனால் அது நடக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயான நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். பாதி படத்திற்கு மேல், சில நிமிடங்களுக்கு மட்டுமே வரும் ரஜினியின் கெட்டப் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சில நிமிடங்களே வந்தாலும், தனது அப்பாவுக்கு என ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகளின் இயக்கத்தின் ரஜினிகாந்த் நடித்திருப்பதை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருகின்றனர்.
.@dhanushkraja had a script for me, but unfortunately I couldn’t do it
— • (@introvert_lub) February 6, 2024
~#Rajinikanth #LalSalaam #D50 #Dhanush
pic.twitter.com/WjFt0YBqci
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, “ தனது அப்பா( ரஜினிகாந்தை) ‘சங்கி’ என விமர்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியது இணையத்தில் டிரெண்டானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷூம் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். ஆனாலும், லால் சலாம் படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் தனுஷ் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion