மேலும் அறிய

Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?

Mahindra Discount March 2026: மஹிந்த்ரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு மார்ச் மாத இறுதி வரையில் 4 லட்சம் ரூபாய் வரையில் சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

Mahindra Discount March 2026: மஹிந்த்ரா நிறுவனத்தின் எந்தெந்த எஸ்யுவிக்களுக்கு எவ்வளவு சலுகைகள் மார்ச் மாதத்தில் வழங்கப்படுகின்றன என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சத்திற்கு சலுகைகள்:

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், கார் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மஹிந்த்ரா நிறுவனமும் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள பல எஸ்யுவிக்கள் மீது, வாடிக்கையாளர்களை கவரும் விதமான சலுகை மற்றும் தள்ளுபடி திட்டங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாடல் மற்றும் வேரியண்ட் அடிப்படையில் ப்ராண்டின் மாடல்கள் மீது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரையில், மார்ச் மாதத்தில் பயனர்கள் சேமிக்கலாம்.

எந்த கார்களுக்கு அதிக சலுகைகள்?

பெரும்பாலான சலுகைகளானது 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு முன்னுரிமையுடன் வழங்கப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள பழைய யூனிட்களை புதிய நிதியாண்டு தொடங்குவதற்குள் விற்று தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு மிதமான சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் அக்செசரீஸ்கள் மட்டும் எக்சேஞ்ச் இன்செண்டீவ்ஸ்களாகவே உள்ளன. ஒட்டுமொத்தத்தில் சற்றே பழைய மஹிந்த்ரா கார்களை வாங்க விருபும் நபர்கள், மார்ச் மாதத்தில் பெரிய பலனை ஈட்டலாம்.


Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?

எந்த கார் மாடலுக்கு எவ்வளவு சலுகை, தள்ளுபடி?

மிதமான சலுகைகளை பெறும் மாடல்களில் ப்ராண்டின் பிரபலமான காரான பொலேரோ இடம்பெற்றுள்ளது. இதன் B4, B6 மற்றும் B8 வேரியண்ட்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அக்செசரீஸ்களை பெறுகின்றன. அதேநேரம், B6 ஆப்ஷனல் வேரியண்டானது 20 ஆயிரம் ரூபாய் பண தள்ளுபடியுடன் அக்செசரிஸ் சலுகைகள் உடன் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பலன்களை பெறுகிறது.

மிகவும் மாடர்னானா மஹிந்த்ராவின் பொலேரோ நியோ மாடலானது, குறிப்பிட்ட ட்ரிம்கள் மீது 30 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களை பெறுகிறது. N8 வேரியண்டானது 20 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி உடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அக்செசரீஸ்களை இலவசமாக பெற வழிவகை செய்கிறது. அதேநேரம், N4, N10 மற்றும் N11 ஆகிய மாடல்கள் இலவச அக்செசரீஸ்கள் மற்றும் குறைந்த அளவிலான பணத்தள்ளுபடிகளை மட்டுமே பெறுகின்றன.


Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?

லட்சங்களில் எந்த கார்களுக்கு சலுகை?

ப்ராண்டின் உயர்ரக மாடல்களை நோக்கி நகர்ந்தால், மஹிந்த்ராவின் ஸ்கார்ப்பியோ க்ளாசிக்  மாடலானது கணிசமான சலுகைகளை பெறுகிறது. க்ளாசிக் எஸ் வேரியண்டிற்கு 85 ஆயிரம் பணத்தள்ளுபடி மற்றும் 40 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ்கள் என மொத்தம் 1.25 லட்சம் ரூபாய் சேமிப்பு ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் எஸ்11 வேரியண்டானது ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான சலுகைகளை கொண்டுள்ளது.

காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் XUV 3X0 கார் மாடலின் டாப் வேரியண்டான AX7L TGDI, 55 ஆயிரம் பணத்தள்ளுபடி மற்றும் 25 ஆயிரம் அக்செசரீஸ் பேக்கேஜ் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகளை பெற்றுள்ளது. மிட்ஸ்பெக் வேரியண்ட்களான MX2, MX3, AX7 ஆகிய மாடல்களுக்கு மிதமான சலுகைகளை கொண்டுள்ளது.

மாடல்

வேரியண்ட் (அதிகபட்ச தள்ளுபடி)

பண தள்ளுபடி

மொத்த பலம்கள்

XUV 400 ப்ரோ

EL ப்ரோ

ரூ. 4,00,000

ரூ. 4,00,000

எக்ஸ்யூவி 700

AX5 / AX5 செலக்ட்

ரூ. 1,70,000

ரூ. 2,00,000

ஸ்கார்பியோ க்ளாசிக்

க்ளாசிக் எஸ்

ரூ. 85,000

ரூ. 1,25,000

XUV 3XO

AX7L TGDI

ரூ. 55,000

ரூ. 80,000

பொலேரோ

B6 ஆப்ஷனல்

ரூ. 20,000

ரூ. 30,000

பொலிரோ நியோ

N8 

ரூ. 20,000

ரூ. 30,000


Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?

ரூ.4 லட்சம் எந்த காருக்கு?

மார்ச் மாதத்தில் மஹிந்த்ராவின் அதிகபட்ச சலுகையானது XUV 400 ப்ரோ மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. EL Pro வேரியண்டானது 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பலன்களை பெற்று, தற்போதைய சூழலில் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் மின்சார காராக உள்ளது. EC ப்ரோ வேரியண்டானது ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடிகளை கொண்டுள்ளது. இறுதியாக XUV 700 மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் மீது 2 லட்சம் ரூபாய் வரையில் மஹிந்த்ரா நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

மஹிந்த்ரா நிறுவனத்தின் எந்தெந்த கார்களுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன?

மார்ச் மாதத்தில், மஹிந்த்ரா XUV 400 ப்ரோ மாடல் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் சலுகைகளுடன் கிடைக்கிறது. இதுவே தற்போதைய சூழலில் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் மின்சார கார் ஆகும்.

XUV 700 மாடலுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்?

XUV 700 மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. AX5 / AX5 செலக்ட் வேரியண்ட்களுக்கு 1.70 லட்சம் ரூபாய் பணத்தள்ளுபடி மற்றும் 2 லட்சம் ரூபாய் வரை மொத்த பலன்கள் கிடைக்கும்.

ஸ்கார்பியோ கிளாசிக் மாடலுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன?

ஸ்கார்பியோ கிளாசிக் மாடலுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. க்ளாசிக் எஸ் வேரியண்டிற்கு 85 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடியும், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அக்செசரீஸ்களும் என மொத்தம் 1.25 லட்சம் ரூபாய் சேமிக்கலாம்.

பொலேரோ மற்றும் பொலேரோ நியோ மாடல்களுக்கு என்ன சலுகைகள்?

பொலேரோ மாடலின் B6 ஆப்ஷனல் வேரியண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பலன்கள் கிடைக்கின்றன. பொலேரோ நியோ N8 வேரியண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடியுடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அக்செசரீஸ்கள் இலவசமாக கிடைக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top selling SUVs: மார்ச்சில் அதிகம் விற்ற எஸ்யுவிகள்: நெக்ஸானை முந்திய டாடா பஞ்ச், செல்டோஸ், வென்யூ அபாரம்- லிஸ்ட்!
Top selling SUVs: மார்ச்சில் அதிகம் விற்ற எஸ்யுவிகள்: நெக்ஸானை முந்திய டாடா பஞ்ச், செல்டோஸ், வென்யூ அபாரம்- லிஸ்ட்!
Petrol Vs CNG: பெட்ரோலா.? CNG-ஆ.?; நீங்க டெய்லி ஆஃபீஸ் போறதுக்கு எந்த கார் மலிவானது.? வாங்க தெரிஞ்சுப்போம்
பெட்ரோலா.? CNG-ஆ.?; நீங்க டெய்லி ஆஃபீஸ் போறதுக்கு எந்த கார் மலிவானது.? வாங்க தெரிஞ்சுப்போம்
Budget CNG Cars: ரூ.4.62 லட்சம் தான்..! 34.4 KM மைலேஜ் - எரிபொருள் செலவை குறைக்கும், டாப் 5 பட்ஜெட் சிஎன்ஜி கார்கள்
Budget CNG Cars: ரூ.4.62 லட்சம் தான்..! 34.4 KM மைலேஜ் - எரிபொருள் செலவை குறைக்கும், டாப் 5 பட்ஜெட் சிஎன்ஜி கார்கள்
Tata Safari EV: புதுசா, பெருசா..இந்தியாவின் 7 சீட்டர் எலக்ட்ரிக் காராக களமிறங்கும் டாடா சஃபாரி: எப்போ அறிமுகம்?
Tata Safari EV: புதுசா, பெருசா..இந்தியாவின் 7 சீட்டர் எலக்ட்ரிக் காராக களமிறங்கும் டாடா சஃபாரி: எப்போ அறிமுகம்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
iPhone 17 Huge Offer: இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
Embed widget