மேலும் அறிய

அடுத்தடுத்து மிரட்டல்கள்... நடிகர் சங்க கட்டடப் பணியை நிறைவு செய்ய புதிய திட்டம்!

கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணி, நிதி நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கு  நிறுத்திவைக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர்களுக்கென அமைக்கப்படவுள்ளது நடிகர் சங்க கட்டடம். நடிகர்களுக்கான சங்கத்தை 1942 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ஆர் நிறுவினார். அதன் பின்னர் விஜயகாந்த், சரத்குமார் என பல நடிகர்கள் இந்த சங்கத்தில் தலைவர் பதவி வகித்தனர். தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டடத்தில் 70 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. இதில், புதிய  திரையரங்குகள், திருமண மண்டபம், நடிகர்களுக்கான பயிற்சி அலுவலகங்கள் என பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட இந்த கட்டுமான பணி, நிதி நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கு  நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் இதற்காக நிதி திரட்டும் வகையில் மலேசியா உள்ளிட்ட பல நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. 

அடுத்தடுத்து மிரட்டல்கள்... நடிகர் சங்க கட்டடப் பணியை நிறைவு செய்ய புதிய திட்டம்!

தற்போது தமிழ் திரைப்பட நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வரும் நடிகர் சங்கத்தில், பல முன்னனி நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். துணைத் தலைவர்களாக நடிகர் கார்த்தியும்,  பொது செயலாளராக நடிகர் விஷாலும், பதவி வகிக்கின்றனர். இவர்கள் பதவியேற்றவுடன் முதல் வேளையாக நடிகர் சங்க கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தனர். குறிப்பாக, “நடிகர் சங்க கட்டடத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று  நடிகர் விஷால் சபதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மே மாதத்தில் நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களான விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட  பலர் அதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்டுமான  பணிகளைத் தொடர்ந்து முடிக்க இன்னும் 30 கோடி தேவைப்படுவதால் வங்கிக்கடன் வாங்கலாம் என முடுவு செய்யப்பட்டது. 

அடுத்தடுத்து மிரட்டல்கள்... நடிகர் சங்க கட்டடப் பணியை நிறைவு செய்ய புதிய திட்டம்!

நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்

இதனிடையே நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தன. சமீபத்தில், நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் யாரோ கொலை மிரட்டல் விடுத்ததாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சங்க மேளாலர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார். இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் கார்த்தியை பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகயுள்ளது. 

முன்னனி நடிகர்கள் உதவி

நடிகர் சங்க கட்டடத்தின் வேலைகளை விரைவில் முடிக்க நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து  பேச்சுவார்தை நடத்த, நடிகரும் பொருளாளருமான கார்த்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடிகர் அஜித்தை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரை பரிசு மழையில் நனைய வைத்ததால், நடிகர் சங்கத்திற்கு தேவையான இந்த உதவியை கமல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget