3 மணி நேரத்திற்கு மேல் ஓடும்... யூ.ஏ., சான்றிதழோடு ஆரவாரமாக தயாரானது RRR!
RRR படத்தின் நீளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜ மெளலி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் RRR. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இந்தத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் படி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் படம் எவ்வளவு நீளம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில், 184. 54 நிமிடங்கள் ஓடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் 3 மணி நேரம் 5 நிமிடம் ஓடும் எனத் தெரிய வந்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ள இந்தப்படத்தில், செந்தில் குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
#RRRTrailer Out Now!!
— DVV Entertainment (@DVVMovies) December 9, 2021
Telugu - https://t.co/tQlooQSFJ4
Hindi - https://t.co/pxWJujzupv
Tamil - https://t.co/E7a4UX0Quj
Kannada - https://t.co/UVBsxJVY9X
Malayalam - https://t.co/HlHwULBxxU
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்