![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rayane Radhika | "என்னை மாதிரியே என் குழந்தைகளுக்கும்.." ராதிகா மகள் ரேயானின் ஸ்வீட்டான போஸ்ட்..
என்னை மாதிரியே என் குழந்தைகளுக்கும் என் அம்மாவை அதிகம் நேசிக்கின்றனர் என்று ராதிகா மகள் ரயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![Rayane Radhika | Radhika's daughter Rayane Mithun shares her family pics on instagram page Rayane Radhika |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/e30ae682b04df6a658c38833458adeb9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியின் மகள் ரயான் கடந்த 2016 ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற ஆண் குழந்தை இருந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான ரயானுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த அந்த பெண் குழந்தைக்கு தன் அம்மாவின் நினைவாக ராத்யா என பெயரிட்டு மகிழ்ந்தார் ரயான். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும், மகன், மகள், அப்பா சரத்குமார், அம்மா ராதிகா சம்பந்தப்பட்ட போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில், நடிகை ராதிகா தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் ஓடியாடி விளையாடிய புகைப்படத்தை ரயான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், என்னை மாதிரியே என் குழந்தைகளுக்கும் என் அம்மாவை அதிகம் நேசிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்த ரயான், 16 கிலோ வரை உடல் எடையை குறைத்தாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுடிருந்தார். அந்த புகைப்படம் மிகப்பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தொடர்ந்து, ரயான் தனது அம்மாவான ராதிகாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம், அவருடன் இருந்த நினைவுகள் குறித்தும் பகிர்ந்திருந்தார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)