Iravin Nizhal: ஓடிடியில் வெளியாகாத இரவின் நிழல்...பொன்னியின் செல்வன் காரணமா? ..அதிர வைத்த பார்த்திபன் ட்வீட்..!
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல்.
நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் ஓடிடியில் வெளியாகாத நிலையில் அதுகுறித்து அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் கடந்த ஜூலை 15 ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை ரஜினிகாந்த் உட்பட திரைப்பிரபலங்கள் பாராட்டிய நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் - பார்த்திபன் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஆனாலும் இரவின் நிழல் பல திரைப்பட விழாக்களிலும் விருதுகளை குவித்து வருகிறது. இந்த படத்திற்காக ஏகப்பட்ட பிரச்சனைகளை பார்த்திபன் சந்தித்த நிலையில் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தால் அவை எல்லாம் காணாமல் போனது என்றே சொல்லலாம்.
அமேசானில் இன்று முதல்’பொன்னியின் செல்வன்’எனவே,வரும் வாரம் வருமாம்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 4, 2022
‘இரவின் நிழல்’-செய்தி
பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்.
அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை!conti
Conti…பெருங்கொடை!குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 4, 2022
மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!
இரவின் படம் வெளியாகி கிட்டதட்ட 3 மாதங்களை கடந்து விட்ட நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பார்த்திபன் அதில் அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை படம் வரவில்லை.
இதற்கிடையில் தமிழ் சினிமாவின் கனவுப் படம் என்று கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் சின்ன பழுவேட்டரையாக பார்த்திபன் நடித்திருந்தார். இந்நிலையில் இரவின் நிழல் குறித்து பார்த்திபன் புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமேசானில் இன்று முதல் ’பொன்னியின் செல்வன்’. எனவே வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’-செய்தி
பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை! என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொன்னியின் செல்வன் தான் இரவின் நிழல் படம் ஓடிடியில் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் என பார்த்திபன் சொல்ல வருகிறாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.