Radha Ravi Speech: ‛ஆன்டி இண்டியன் என்பதே பிரச்சனைக்குரியது தான்...’ -ராதாரவி ஓப்பன் டாக்!
சர்ச்சைக்குரிய படங்கள்தான் இப்போது நன்றாக ஓடுகின்றன. மாறன் இந்தப் படத்தில் அற்புதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'ஆன்டி இண்டியன்' என்ற பெயரே பிரச்சனைக்குரிய ஒரு பெயர் - ராதாரவி
தமிழ் சினிமா விமர்சகர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனத்துக்கு ஒரு தரப்பினர் ரசிகர்களாக இருந்தாலும் சமயத்தில் இவரது விமர்சனம் எல்லை மீறி போகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அனைத்து படங்களையும் விமர்சனம் செய்யும் மாறன் முடிந்தால் ஒரு படம் எடுக்கட்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறினர். இதனையடுத்து படம் இயக்குவதற்கு ப்ளூ சட்டை மாறன் முடிவு செய்தார்.
அதன்படி அவர் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தலைப்பே விவகாரமாக இருக்கும் இந்தப் படத்தில் மாறன், கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளராகவும் மாறன் களத்தில் குதித்துள்ளார். அனைத்து படங்களையும் விமர்சனம் செய்தவரின் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆதம் பாவா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஆண்டி இண்டியன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, “முன்பெல்லாம் ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் லொக்கேஷன் பார்க்க வேண்டும், பணம் வேண்டும். ஆனால் இப்போது அதனுடன் புதிய பிரச்சனைகளும் சேர்ந்துகொள்கின்றன.
சர்ச்சைக்குரிய படங்கள்தான் இப்போது நன்றாக ஓடுகின்றன. மாறன் இந்தப் படத்தில் அற்புதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'ஆன்டி இண்டியன்' என்ற பெயரே பிரச்சனைக்குரிய ஒரு பெயர். திட்டுவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. பிறரின் திட்டுதான் நமது வளர்ச்சியே.
இப்படி காட்சி வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்கள், அவர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. நான் மாறனிடம் இந்தப் படம் நிச்சயமாக ஓடும் என்று கூறினேன்”என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vedha Nilayam: ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது - தீபாவிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
யாருன்னே தெரியாத பெண் வீட்டுக்குள்ள வந்து, இப்படி பண்ணாங்க.. சைஃப் அலிகான் சொன்ன ஸ்வாரஸ்ய கதை!
Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!