Actor Madhavan: திருமணம் செய்ய ஆசைப்பட்ட 18 வயது பெண்.. மாதவன் சொன்ன பதில்!
அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். மணிரத்னம் இயக்கிய அந்த படம் மாதவன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தன்னை திருமணம் செய்ய விருப்பப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு மாதவன் அளித்துள்ள பதில் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சாக்லேட் பாய் மாதவன்
அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். மணிரத்னம் இயக்கிய அந்த படம் மாதவன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ்நாட்டு இளம்பெண்களை கவர்ந்த நடிகராக திகழ்ந்தார். மேடி மேடி என செல்லமாக அழைக்கும் அளவுக்கு சாக்லேட் பாய் ஆக வலம் வந்தார் மாதவன். தமிழில் ரன், ஆய்த எழுத்து, தம்பி, மின்னலே, ஜேஜே, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ராக்கெட்ரி ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
இதில் ராக்கெட்ரி படத்தை இயக்கி இயக்குநராகவும் அவர் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் மாதவன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நயன்தாரா மற்றும் சித்தார்த்துடன் டெஸ்ட் என்ற படத்திலும், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் லண்டன் படத்திலும், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சைத்தான் படம் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திருமணம் செய்ய விருப்பப்பட்ட பெண்
இதனிடையே சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மாதவன் அவ்வப்போது புகைப்படம், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவுக்கு ஒரு இளம் பெண் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டில், “எனக்கு 18 வயது ஆகிறது. நான் உங்களை திருமணம் செய்ய விரும்புவது தவறா?” என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மாதவன், “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். நீங்கள் என்னை விட இன்னும் தகுதியான நபரை காண்பீர்கள்” என பதிலளித்தார்.
பொதுவாக திரையுலக பிரபலங்களின் சமூக வலைத்தள பதிவுகளில் சகஜமாக இதுபோன்ற திருமண விருப்பங்களை தெரிவிப்பது உள்ளிட்டவற்றை காணலாம். இதற்கு சிலர் ரியாக்ட் செய்யாமல் இருப்பார்கள். மாதவன் போன்ற சில பேர் மட்டும் இதனை தனிப்பட்ட விஷயமாக எண்ணாமல் அறிவுரை வழங்குவார்கள். அந்த வகையில் மாதவனின் இந்த அறிவுரைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க!