Pushpa 2 : விஜய் சேதுபதி நடிக்கிறாரா? பூஜையுடன் தொடங்கியது புஷ்பா 2!
அவரது 'ஐகான்' திரைப்படம் தற்போது தொடங்கவில்லை என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
டோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் புஷ்பா: தி ரைஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். இதை அடுத்து அவர் வசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் விரைவில் தொடங்க உள்ளார். புஷ்பா 2 படப்பிடிப்பை முடித்த பிறகு, அல்லு அர்ஜுன் வேணு ஸ்ரீராமின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரது 'ஐகான்' திரைப்படம் தற்போது தொடங்கவில்லை என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்கா பயணம் :
அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் இந்தியாவின் பிரதிநிதியாக டோலிவுட்டின் முன்னணி ஹீரோவான நடிகர் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது மற்றுமொரு போஸ்ட் அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயரைச் சந்தித்தார் அல்லு அர்ஜுன். அப்போது அவருக்கு நம்ம ஹீரோ புஷ்பா படத்தின் பிரபலமான புஷ்பா ஸ்டைலை கற்றுக்கொடுத்தார். அவர்களுடன் அல்லு அர்ஜுன் புஷ்பா ஸ்டைல் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை போஸ்ட் செய்து அதற்கு நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் துணிவான அருமையான மனிதர் என பதிவிட்டு இருந்தார் அல்லு அர்ஜுன்.
View this post on Instagram
பூஜையுடன் ஆரம்பம் புஷ்பா 2 :
புஷ்பா படத்தின் முதல் பாகம் "புஷ்பா தி ரைஸ்" சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றிபெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் "புஷ்பா தி ரூல்" திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று படத்தின் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
புஷ்பா 2 நியூ லுக்:
சமீபத்தில் "புஷ்பா தி ரூல்" திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது அதில் அல்லு அர்ஜுன் சால்ட் அன்ட் பேப்பர் ஹேர்ஸ்டைலில் சுருட்டு பிடித்த படி இருக்கும் தோற்றத்தில் இருந்தார். இந்த பக்கத்தில் அவரின் தோற்றமாக இருக்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.