கோரமான கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல பாடகர்!
Punjabi Singer died: 'மை டர்ன்' ஆல்பத்தின் 'தேரே பினா' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங் கார் விபத்தில் பலியானார்.
Nirvair singh Dies in Car Accident: பயணத்தை முடித்து கொண்ட நிர்வைர் சிங்... பஞ்சாபி பாடகர் கார் விபத்தில் பலி
பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகரான சித்து மூஸ் வாலாவின் படுகொலையில் இருந்தே இன்னும் மீள முடியாத பஞ்சாப் மக்கள் தற்போது மற்றுமொரு இசை கலைஞனை இழந்துள்ளது.
திறமையான பாடகர்:
திறமையான இளம் பஞ்சாபி பாடகரான நிர்வைர் சிங் கார் விபத்தில் பலியானார். 'மை டர்ன்' ஆல்பத்தின் 'தேரே பினா' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான இந்த நிர்வைர் சிங் மெல்போர்னைச் சேர்ந்தவர். இந்த பாடல் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நிர்வைர் சிங் குராலியைச் சேந்தவர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கோரமான கார் விபத்து:
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் டிகர்ஸ் ரெஸ்டின் புறநகர் பகுதியில் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் தொடர்பு உடைய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்பட காரணம் முன்னதாக சென்ற ஒரு கார் தவறாக ஒட்டி செல்லப்பட்டுள்ளது என்கின்றனர் போலீசார். அந்த காரை தவறாக சென்ற காரில் இருந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். சிறு காயங்களுடன் இருந்த அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தீவிர விசாரணையில் போலீசார்:
இந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் புஞ்சபி பாடகர் நிர்வைர் சிங். மூன்றவதாக வந்த காரில் இருந்த நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபு குறித்த விசாரணையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர் போலீசார். விபத்து குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாகும் என உறுதியளித்துள்ளனர் போலீசார்.
View this post on Instagram
கடைசி பாடல்:
நிர்வைர் சிங் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'ஹிக் தோக் கே' என்ற பாடலை பாடகர் குர்லேஜ் அக்தருடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நண்பரான ககன் கோக்ரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் நிர்வைர் சிங்கின் மரண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.