மேலும் அறிய

AjithKumar: ‛உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்...’ ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை!

ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிக்கும் அஜித் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்குவார். 

டின்னிடஸ் எனப்படும் காது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் சமீபத்தில் திரையுலகில் தனது 30வது ஆண்டை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பு அஜித் விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிக்கும் அஜித் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்குவார். 

அந்த வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் டின்னிடஸ் தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” நிபந்தனையற்ற அன்பு எப்போதும் - அஜித்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சுரேஷ் சந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னிடம் அஜித் இந்த பாதிப்பு குறித்து தகவலை சொன்னதாகவும், இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதால் இத்தகைய பதிவை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

டின்னிடஸ் என்பது உங்கள் காதுகளில் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கத்திலும் வித்தியாசமான சத்தம் கேட்கும். இப்படி கேட்கும் சத்தம் வெளிப்புற ஒலியால் ஏற்படாது. இதனால் அருகிலிருப்பவர்களால் அதைக் கேட்க முடியாது. இது ஒரு பொதுவான பிரச்சனை என்ற போதிலும் 15% முதல் 20% மக்களை பாதிக்கிறது.குறிப்பாக வயதானவர்களை இது அதிகம் தாக்குகிறது. காது கேளாமை அல்லது தலைச்சுற்றல், காதில் மெழுகு அளவுக்கு அதிகமாக வெளிப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!
Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!
Pawan Kalyan: பவன் கல்யாண் முதலமைச்சராவார் .. ஆந்திராவை அதிர வைத்த பார்த்திபன் பேச்சு!
Pawan Kalyan: பவன் கல்யாண் முதலமைச்சராவார் .. ஆந்திராவை அதிர வைத்த பார்த்திபன் பேச்சு!
Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
Embed widget